Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் வீட்டில் வெடித்த ஆடை சர்ச்சை.. விசித்ராவுக்கு கட்டம் கட்டிய பெண் போட்டியாளர்கள்..!
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முதல் நாளே போட்டியாளர்களின் ஆடை தொடர்பான சர்ச்சை வெடித்துள்ளது. நடிகை விசித்ராவின் கருத்து இணையவாசிகள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முதல் நாளே போட்டியாளர்களின் ஆடை தொடர்பான சர்ச்சை வெடித்துள்ளது. நடிகை விசித்ராவின் கருத்து இணையவாசிகள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சின்னத்திரையில் அனைத்து விதமான நிகழ்ச்சிகளின் டிஆர்பி ரேட்டிங்கை பின்னுக்கு தள்ளும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்த நிலையில் பெரிதும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் கோலகலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை 7வது ஆண்டாக நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி வார நாட்களில் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகிறது. அதுமட்டுமல்லாமல் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதால் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் முதல் நாள் எபிசோட் நேற்று ஒளிபரப்பானது. இதில் நாமினேட் செய்யப்படும் நிகழ்வுகள் காட்டப்பட்டது.
அப்போது கன்பெஸ்சன் ரூமுக்குள் வந்த நடிகை விசித்ரா, முதலில் நடிகை அனன்யா ராவை நாமினேட் செய்தார். அதற்கு அவர்கள் இன்னும் தன்னை வெளிப்படுத்தி கொள்ளவில்லை என காரணம் கூறினார். இரண்டாவதாக ஐஷூவை நாமினேட் செய்த விசித்ரா அதற்கு கூறிய காரணம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, “ஐஷூ 2, 3 நிகழ்வுகளில் அவர் ஆடை, மேக்கப் ஸ்டைல், உட்காரும் ஸ்டைல் எல்லாம் வேற மாதிரி இருக்கு. இங்க சின்ன வயசு பசங்களும் பெரிய வயசு மனிதர்களும் இருக்காங்க. அதை கொஞ்சம் அக்கறை எடுத்துக்கணும்” என சொன்னார்.
இதனைத் தொடர்ந்து ஸ்மால் வீட்டுக்கு சென்ற நிக்ஸன், பவா செல்லதுரை, அனன்யா, ஐஷூ, வினுஷா தேவி, ரவீனா தாஹா ஆகிய 6 போட்டியாளர்களிடம் பேசிய பிக்பாஸ் உட்காரும் ஸ்டைல், ஆடை உள்ளிட்ட காரணங்களை தெரிவித்து பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் நாமினேட் செய்ததை கூறினார். இந்த விவகாரம் அந்த வீட்டில் உள்ள இளம் பெண்களை கடுமையான அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதன்பின்னர் அனன்யா, ஐஷூ, ரவீனா, அக்ஷயா, மாயா ஆகியோர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அனன்யா “யாராக இருக்கும் அந்த 7 போட்டியாளர்களில் ஆடை பற்றி பேசியது” என குழம்பிக் கொண்டிருந்தார். உடனே உடன் இருந்தவர்கள் உங்களுக்கு தேவைப்பட்டால் மட்டும் மாற்றிக் கொள்ளுங்கள். அங்கு வரும் மாயாவிடம் விஷயத்தை சொல்ல, நீ ஒன்னும் கவலைப்படாத. ட்ரெஸ்ஸிங் பத்தி பேசியவன் தான் நாமினேட் ஆவான். நீ என்ன பண்ணுறியோ பண்ணு. என்ன டிரெஸ் வேண்டுமானாலும் போடு. நீ என்ன கொண்டு வந்துருக்கியோ அந்த டிரஸ் போடு” என கறாராக சொல்கிறார்.
இதுவரை இந்த பெண் போட்டியாளர்கள் எல்லாம் ஆண் போட்டியாளர்கள் தான் டிரெஸ் பத்தி பேசியது என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பேசியதே ஒரு பெண் தான் அவர்களுக்கு தெரியாது. அதேசமயம் சமூக வலைத்தளங்களில் விசித்திராவுக்கு எதிரான கருத்துகளை இணையவாசிகள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: கதை சொல்ல தொடங்கிய பவா செல்லதுரை.. கதறி அழுத கூல் சுரேஷ்.. வைரலாகும் வீடியோ..!