(Source: ECI/ABP News/ABP Majha)
Bigg Boss 7 Tamil: சாதி பிரச்னை முதல் குழாயடி சண்டை வரை.. இந்த வாரம் இதைக் கண்டிப்பாரா கமல்?
பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக வெறுப்பும் சலசலப்பும் சண்டை சச்சரவுகளும் தொடர்ந்து வருகிறது.
பிக்பாஸ் தமிழ் 7:
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் 7ஆவது சீசன் 27-வது நாளை எட்டியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் வீட்டில், தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். முதல் வார எலிமினேஷனில் அனன்யா ராவ் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து எழுத்தாளர் பவா செல்லதுரை தன் விருப்பத்தின் பேரில் பிக்பாஸ் வீட்டில் இந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான விஜய் வர்மா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
தற்போது பிக்பாஸ் வீட்டில் ஜோவிகா, மாயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி, விசித்திரா, யுகேந்திரன், கூல் சுரேஷ், நிக்ஸன், விஷ்ணு, சரவண விக்ரம் உள்ளிட்டவர்கள் நடுவில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. பூர்ணிமா இந்த வார கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஓபன் நாமினேஷன் இந்த வாரம் தொடங்கியதில் பலரும் மாயா, பிரதீப், ரவீனா மற்றும் மணியை நாமினேட் செய்துள்ளனர். இந்த வாரம் பூர்ணிமா வீட்டின் தலைவராக உள்ளார்.
சண்டை சச்சரவு:
இந்நிலையில், நித்தம் ஒரு டாஸ்க், நித்தம் ஒரு பிரச்னைகளுடைனே இந்த வாரம் இருந்து வந்தது. அதன்படி, வாரத்தின் முதல் நாள் கூலாக சென்றாலும், இரண்டாவது நாள் சாதி பிரச்னையுடன் தொடங்கி இருக்கிறது. அதன்படி, சக போட்டியாளரான மணி மீது மாயா குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த வாரம் நடந்த ஓபன் நாமினேசனில் கூட, மணி ஒரு பிற்போக்குவாதி என்று மாயா விமர்சித்து இருந்தார். அதாவது, "மாயா சிக்கன் கிரேவி மட்டும் ஊற்றி, கறி சாப்பிடாமல் இருந்தார். எனவே, கறி சாப்பிடாததால் நீ பிராமிணா என கேட்டிருக்கிறார்” மணி.
இதனை அடுத்து, மணி, ரவீணாவுக்கு இடையே சண்டை தீவிரம் அடைந்திருக்கிறது. மணியின் வீட்டில் இருந்து அனுப்பப்பட்ட வீடியோவுக்கு ரவீணா டிஸ்லைக் கொடுத்ததற்கு மணி கடுப்பாகி சண்டை போட்டுள்ளார். தனக்கு டிஸ்லைக் கொடுத்தது தப்பு என்று சொல்லி சண்டை போட்டுயிருக்கிறார். பின்னர், நேற்றைய நாளில் நடந்த ரேங்கிங் டாஸ்கில் பிரதீப், ஜோவிக்காவை நாய் என்று திட்டியுள்ளார். இதற்கு அதே இடத்திலேயே மன்னிப்பு கேட்டு ரேங்கிங் டாஸ்கில் முதல் இடத்தை ஜோவிக்காவிடம் கொடுத்துவிட்டு, 15வது இடத்தில் நின்றுகொண்டார் பிரதீப்.
கண்டிப்பாரா கமல்ஹாசன்?
வார இறுதியான இன்றைய நாளில், ஷாப்பிங் ரீபேமெண்ட் டாஸ்க்கில் பிக்பாஸ் வீடு தோல்வி அடைந்ததால், அவர்களுக்கு சாப்பாடு இல்லை என்று பிக்பாஸ் கூறியது. இதனைத் தொடர்ந்து சாப்பாடு முக்கியம் என பிக்பாஸ் வீட்டில் இருந்து விதியை மீறி மாயா ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்ல, அங்கு இருப்பவர்களிடம், நாங்கள் வரலாமா எனக் கேட்கிறார். மாயா மற்றும் கூல் சுரேஷ் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். இப்படியாகவே இந்த வாரம் சென்றிருக்கிறது.
பல லட்சக்கணக்கான மக்கள், சிறுவர்கள் பார்க்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் போட்டியாளர்கள் சமூக பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்றும், சாதி, மதம், பாலினம் தொடர்பான பேச்சுக்கள், உருவ கேலிகள், கெட்ட வார்த்தைகள் பேசுவதை கமல்ஹாசன் கண்டிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனை வார இறுதியில் கமல்ஹாசன் தட்டிக் கேட்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!