Bigg Boss 7 Tamil: கிரிமினல் எனக் கூறிவிட்டு காதல் வலை வீசும் விஷ்ணு.. சிக்குவாரா பூர்ணிமா?
பிக்பாஸ் வீட்டில் சென்ற வாரம் போல இல்லாவிட்டாலும் இந்த வாரம் ஆங்காங்கே முட்டல், மோதலும் தொடர்ந்து தான் வருகிறது.
பிக்பாஸ் தமிழ்
விஜய் டிவியில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியை 7வது ஆண்டாக நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலில் 18 போட்டியாளர்களும், ஒரு மாதம் நிறைவடைந்த பின் வைல்ட்கார்ட் என்ட்ரியாக 5 பேரும் என 23 பேர் இதுவரை பங்கேற்றனர்.
இவர்களில் பவா செல்லதுரை, விஜய் வர்மா, அனன்யா ராவ், வினுஷா தேவி, அன்னபாரதி, யுகேந்திரன், ஐஷூ , பிரதீப் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது மாயா, பூர்ணிமா, ஜோவிகா, நிக்ஸன், சரவண விக்ரம், ரவீனா, மணி சந்திரா, தினேஷ் காமராஜ், ஆர்.ஜே.பிராவோ, அக்ஷயா உதயகுமார், விஷ்ணு விஜய், கூல் சுரேஷ், விசித்ரா, கானா பாலா, விஜே அர்ச்சனா ஆகியோர் பிக்பாஸ் போட்டியின் 46ஆவது நாளை எட்டியுள்ளனர். இந்த வாரம் கேப்டனாக தினேஷ் இருந்து வருகிறார்.
விஷ்ணு - பூர்ணிமா
சென்ற வாரம் போல இல்லாவிட்டாலும் இந்த வாரம் ஆங்காங்கே முட்டல், மோதல், காதலும் தொடர்ந்து தான் வருகிறது. இந்த சீசினில் ஏற்கனவே மணி, ரவீணா, நிக்சன் - ஐஷூ என இரண்டு ஜோடிகள் லவ் ட்ராக்கை ஒட்டி வலம் வந்து கொண்டிருந்தன. அதில், கடந்த வாரம் ஐஷூ எலிமினேட் செய்து காதல் ஜோடிகளை பிரித்துவிட்டார் பிக்பாஸ். இந்நிலையில், தற்போது மற்றொரு காதல் ஜோடி உருவாகி இருக்கிறது.
முதலில் சரவண விக்ரம் மீது க்ரஷ் இருப்பதாக கூறி வந்த பூர்ணிமா, தற்போது விஷ்ணுவிடம் தனக்கு ஃபிலிங் இருப்பதாகி கூறி இருக்கிறார். இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோ காட்சியில், "எங்க வீட்டில் நான் எந்த பொண்ண காட்டுனாலும் கல்யாணம் பண்ணி வைப்பாங்க. நான் இப்போ வரை சிங்கிளாக தான் இருக்கிறேன்" என்று விஷ்ணு கூறுகிறார்.
அதற்கு பூர்ணிமா, “யார் தாங்க நீங்க?” எனக் கேட்க, விஷ்ணு விஜய் என சிரித்தபடி பேசுகிறார். இதற்கு பூர்ணிமா, "இந்த மாதிரி இருந்தா நல்லா இருக்கு. எனக்கு புடிச்சிருக்கு. ஆனா எனக்கு ஒரு பீலிங் இருக்கு. எனக்கு என்ன தோணுதோ சொல்லுறேன். பிடிக்கலனா ஓப்பனாகவே சொல்லுங்க" என்று பூர்ணிமா பேசும் காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள், புல்லி கேங் வீசிய வலையில் விஷ்ணு சிக்கிக் கொண்டதாகவும், டைட்டில் விக்ரம் சரவணன் பார்த்தால் என்ன ஆகும் என்று கூறி வருகின்றனர்.
மேலும், இணையத்தல் வெளியான சில காட்சிகளில் பூர்ணிமாவை கிரிமினல் என விஷ்ணு கூறுகிறார். அதாவது, ”மாயா ஒரு கிரிமினல், பூர்ணிமா ஒரு கிரிமினல். இவங்க இரண்டு பேரும் பெரிய கிரிமினல். உஷாரா இருக்கணும்" என்று பிராவோவிடம் கூறிகிறார் விஷ்ணு.
#Vishnu to Bravo - #Maya is criminal #Poornima is another criminal . Both are big criminals . Beware of them !!#BiggBossTamil7 #BiggBossTamil #BiggBossTamilSeason7
— Ganesh (@Ganesh_Gansi) November 16, 2023
Copyright - Disney + Hotstar pic.twitter.com/ECq0uCB8HE
இந்தக் காட்சிகளும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. விஷ்ணு டபுள் கேம் ஆடுகிறார் என்று நெட்டிசன்கள் பலரும் விலாசி வருகின்றனர்.