Bigg Boss 7 Tamil : பிக்பாஸ் 7 ரிவ்யூ... நேரடியாக களத்தில் இறங்கும் வனிதா - சனம்... இந்த முறை ஃபேட் மேன் ரவீந்தருக்கு சான்ஸ் கிடைக்கல...
Bigg boss 7 Tamil : பிக் பாஸ் 7 தமிழ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்ய தயாராக வனிதாவும் சனம் ஷெட்டியும் காத்திருக்க நக்கலும் நையாண்டியுமாக கிண்டலடிக்கும் ரவீந்தருக்கு இந்த முறை வாய்ப்பில்லை. காரணம் என்ன?
இன்று மாலை 6 மணிக்கு மிகவும் பிரமாண்டமாக துவங்க உள்ளது பிக் பாஸ் சீசன் 7. பொதுவாகவே பிக் பாஸ் சீசன் துவங்குவதற்கு முன்னால் ரசிகர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி குறித்த பலவிதமான எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால் இந்த சீசன் துவங்குவதற்கு முன்னரே பரபரப்பு உச்சத்தில் உள்ளது. அதற்கு காரணம் முதல் முறையாக தமிழ் ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியையே இரண்டு வீடுகளோடு பார்க்க உள்ளனர். இந்த முறை விளையாடும் புதுசு ட்விஸ்ட்களும் புதுசாக இருக்க போகிறது. அதனால் ஸ்வாரஸ்யத்திற்கு பஞ்சமே இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி வேறு மொழிகளில் ஏற்கனவே ஒளிபரப்பாகி வந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பை பெரும் என்ற சந்தேகத்துடன்தான் துவங்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக மாபெரும் வரவேற்பை 2017ம் ஆண்டு முதல் சீசன் துவங்கியதில் இருந்து கொடுத்து வருகிறார்கள் ரசிகர்கள். ஒவ்வொரு சீசனிலும் அதன் எண்ணிக்கை மேலும் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.
தினமும் கேட்கலாம் பிபி ரிவ்யூ :
எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அதற்கு விமர்சனங்கள் எழுவது சகஜமே. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஏராளமானவர்கள் ரிவ்யூ செய்து வருகிறார்கள். கமல்ஹாசன் வர இறுதி நாட்களில் மட்டும் கலந்து கொண்டு அந்த வாரத்தின் நிகழ்வுகளை ரிவ்யூ செய்வார். ஆனால் யூடியூப் மூலம் பலரும் தினசரி எபிசோடுகளை ரிவ்யூ செய்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். அது போன்ற வீடியோக்கள் மக்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்.
வனிதாவின் விமர்சனம் கேட்கணுமா?
நடிகை வனிதா விஜயகுமார் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு போட்டியாளராக இருப்பதால் அடுத்தடுத்த சீசன்களை ரிவ்யூ செய்து வந்தார். விமர்சனங்களை முன் வைக்க தயங்காத வனிதா இதற்காக பல மிரட்டல்களை சந்தித்தாலும் அதை எதையுமே பொருட்படுத்தாமல் தில்லாக தனது விமர்சனத்தை முன்வைத்து வந்தார். கடந்த பிக் பாஸ் சீசன்களை போலவே பிக் பீஸ் சீசன் 7 நிகழ்ச்சியையும் ரிவ்யூ செய்ய தயாராகி விட்டார். இந்த முறை வனிதாவுக்கு இந்த பிக்பாஸ் சீசன் சற்று கூடுதல் ஸ்பெஷல். காரணம் வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா விஜயகுமார் இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்க உள்ளார்.
வனிதா விஜயகுமாரை போலவே இந்த ஆண்டு முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சனம் ஷெட்டியும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியை ரிவ்யூ செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாய்ப்பில்ல ராஜா :
வழக்கமாக நக்கலும் நையாண்டியுமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வந்த ஃபேட் மேன் ரவீந்தர் இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்ய முடியாது. காரணம் அவரில் சிறையில் இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியை கலாய்க்கும் ரவீந்தருக்கு இந்த முறை சான்ஸ் கிடைக்கவில்லை.