மேலும் அறிய

VJ Archana: மீண்டும் கதறி அழும் அர்ச்சனா.. குஷியில் விசித்ரா.. உடைந்த கூட்டணி.. பரபரப்பின் உச்சத்தில் பிக்பாஸ் வீடு!

பிக்பாஸில் வைல்டு காட்டு எண்ட்ரியாக வருகை தந்து, வெகு சில நாள்களிலேயே ஆரம்பம் முதலே இருந்து வரும் போட்டியாளர்களை ஓவர்டேக் செய்து, லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளவர் விஜே அர்ச்சனா.

பிக்பாஸில் விஜே அர்ச்சனா - விஷ்ணு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், விஜே அர்ச்சனா கதறி அழும் காட்சி வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பிக்பாஸில் வைல்டு காட்டு எண்ட்ரியாக வருகை தந்து, வெகு சில நாள்களிலேயே ஆரம்பம் முதலே இருந்து வரும் போட்டியாளர்களை ஓவர்டேக் செய்து, லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளவர் விஜே அர்ச்சனா. முதல் ஒரு வாரம் விஜே அர்ச்சனா கண்ணீரும் கம்பலையுமாக வலம் வந்த நிலையில், அடுத்தடுத்த நாள்களில் மாயா - பூர்ணிமா - ஜோவிகா - நிக்ஸன் - ஐஷூ ஆகியோரின் கூட்டணிக்கு எதிராக பாயிண்ட் பிடித்துப் பேசி ஏகோபித்த வரவேற்பை பெற்றார்.

மேலும் விசித்ராவுடன் இணைந்து அர்ச்சனா விளையாடத் தொடங்க, இந்தக் கூட்டணிக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானதுடன் துவண்டு கிடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியும் உயிர் பெற்று ரேட்டிங்கில் மீண்டும் ஏறுமுகத்துக்கு சென்றது.

கடந்த வாரம் விஜய் வர்மா, அனன்யா என பழைய போட்டியாளர்கள் மீண்டும் எண்ட்ரி தர பிக்பாஸ் தற்போது மீண்டும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே இந்த வாரம் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிலும், விசித்ரா ஸ்மால் பாஸ் வீட்டிலும் இருக்க, விசித்ரா கடந்த சில நாள்களாக மாயா - பூர்ணிமாவுடன் கூட்டணி வைத்து விளையாடி வருவது கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

குரு - சிஷ்யன் போல் விசித்ரா - அர்ச்சனா கூட்டணி தங்கள் கேம் பிளானை பிக்பாஸ் வீட்டில் அமல்படுத்தி ஆடியன்ஸை கவர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக இவர்களுக்கு உள்ளே ஏற்பட்டுள்ள இடைவெளி இருவரது ரசிகர்களையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பிக்பாஸில் கோபக்கார இளைஞராக வலம்  வரும் விஷ்ணுவுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையே கடந்த சில நாள்களாக மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

நேற்றைய எபிசோடில் விஷ்ணு மார்னிங் டாஸ்க்கின்போது “எனக்கு சூப்பர் பவர் கிடைத்தால், ஒருவர் மனதில் நினைப்பதை கண்டுபிடிக்கும் பவரை பெறுவேன். இந்த சூப்பர் பவர் கிடைத்தால் எல்லார் மனதிலும் இருப்பதை தெரிந்துகொண்டு, டயலாக்கிலேயே பொளீர் பொளீர்னு இந்த வீட்டில் இருப்போரை வைத்து செய்யலாம்” எனப் பேசினார்.

தொடர்ந்து விஷ்ணு தன்னை தான் இப்படிக் குறிப்பிட்டு பேசினார் என அர்ச்சனா பேசத் தொடங்க, இருவருக்கும் சண்டை வெடித்தது. நேற்று முழுவதும் விஷ்ணு Vs அர்ச்சனா என சண்டை தொடர, சக ஹவுஸ்மேட்ஸ் வேடிக்கை பார்த்தபடியும் யாருக்கு சப்போர்ட் செய்வது எனத் தெரியாமலும் தங்கள் வேலையைத் தொடர்ந்தனர்.

இந்நிலையில், இந்த சண்டை இன்றும் விடாமல் தொடரும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இனிமேல் இந்த வீட்டில் அழ மாட்டேன் எனக் கூறிவிட்டு மீண்டும் அர்ச்சனா இந்த வீடியோவில் கதறி அழுகிறார்.

குழந்தைத் தன்மை மாறாமல் அர்ச்சனா பிஹேவ் செய்வது, பின் சண்டையிடுவது ஆகியவற்றைக் குறிப்பிட்டு அர்ச்சனா நடிப்பதாக விஷ்ணு பிறரிடம் கலாய்க்கும் நிலையில், “நான் மிகவும் ஸ்ட்ரிக்கட்டான பெற்றோரால் வளர்க்கப்பட்டேன். அந்த வயசில் கிடைக்க வேண்டியது எதுவும் கிடைக்கல, அதான் என்னுடைய குழந்தைத் தன்மையை விடாமல் இருக்கேன்” என அர்ச்சனா நியாயம் சொல்லி அழுகிறார்.

மேலும் கேமராவுக்கு தெரியும்படி அர்ச்சனா சில விஷயங்களை செய்வதாக விஷ்ணுவுடன் சேர்ந்து விசித்ராவும் சிரிப்பது, அர்ச்சனா - விசித்ரா கூட்டணியின் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

யாரும் எதிர்பாராத வகையில் அர்ச்சனா - விஷ்ணு இடையே உச்சக்கட்ட மோதல் தொடர்வது பிக்பாஸ் வீட்டையும் ரசிகர்களையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget