Bigg Boss 6 Tamil: ‛மரியாதையே கிடையாது...’ ஜனனிக்கு க்ளாஸ் எடுக்க நினைக்கும் அசிம்!
“மற்றவர்களிடம் மரியாதையாக அவர்கள் நடந்து கொள்ள வேண்டும். சண்டை போடும் போது ஒருமையில் பேசுவதே தப்பு, ஆனால் எப்போதும் அப்படி பேசுவது ரொம்ப தப்பு” என அசிம் பேசியுள்ளார்.

மற்றவர்களை எப்படி மரியாதையாக நடத்த வேண்டும் என்று ஜனனிக்கும் குயின்ஸிக்கும் தெரியவில்லை என அசிம் பேசியுள்ளார். ஒருவரிடம் ஏதாவது குறை இருந்தால், நியாயமாக அவர்களிடமே அதை சொல்வது சரியான விஷயம். ஆனால் பிக்பாஸ் வீட்டில் அதை யாரும் கடைப்பிடிப்பதில்லை.
அந்தவகையில், அசிம், ராம் மற்றும் ஏடிகே ஆகிய மூவரும் தூங்கும் அறையில் படுத்துக்கொண்டு இருந்தனர். அப்போது அசிம், “மணிகண்டன் வயது 35 ஆனால் ஜனனிக்கு 21 வயதுதான் ஆகிறது. இருவருக்கும் 15 வயது வித்தியாசம் உள்ளது. ஆனால் வா போ என்றுதான் பேசிக்கொள்கிறார்கள்.
மணிக்கு அது தப்பாக தெரியவில்லை. என்னை முதலில் அசிம் அண்ணா என்றுதான் சொன்னாள். பின் அசிம் அண்ணா, அசிம் ஆகிவிட்டது. அதுபோல் ஏடிகே அண்ணா என்று சொல்லிக்கொண்டு இருந்தவள் இப்போது ஏடிகே என சொல்கிறாள். விக்ரமன் அண்ணாவை, அந்த பையன் தான் சொன்னான், அந்த ஆளு என்று சொல்கிறாள். மற்றவர்களிடம் மரியாதையாக அவர்கள் நடந்து கொள்ள வேண்டும். சண்டை போடும் போது ஒருமையில் பேசுவதே தப்பு, ஆனால் எப்போதும் அப்படி பேசுவது ரொம்ப தப்பு” என பேசியுள்ளார்.
#Azeem wants to teach #Janany and #Queency "how to respect others" it seems... #BiggBossTamil6 #BiggBossTamil pic.twitter.com/b4rRg9J9bg
— குருநாதா👁️ (@gurunathaa4) November 8, 2022
அசிம் சொல்லுவது சரியான ஒரு விஷயம்தான். இதில் வேடிக்கை என்னவென்றால், அசிமே மற்றவர்களுக்கு மரியாதை தரமாட்டார். சில நாடகளுக்கு முன்பாக, அமுதவாணனை வாடா போடா என பேசினார்.
ஒரு கருத்தை முன்வைக்கும் போது, நாம் அதை சரியாக பின்பற்றுகிறோமா என்பதை உறுதிபடுத்திக்கொண்டு அதை பேச வேண்டும் . அப்படியே ஜனனி செய்வது அவருக்கு தவறாக தோன்றினால், அதை நேரடியாக சென்று ஜனனியிடமே கூற வேண்டும். இப்படி செய்யாமல், கூட்டம் கூட்டி புறம் பேசுவருகிறார் அசீம்.
முன்னதாக, ஏடிகே ராபர்ட் மாஸ்டரிடம் உட்கார்ந்து உரையாடி கொண்டிருந்தார். அப்போது, தனலட்சுமி பற்றி பேச துவங்கிய ஏடிகே, “தனலட்சுமி இருக்குல, இருப்பதிலே அதுதான் ரொம்ப ரொம்ப மோசம். யாரையும் மதிக்க மாட்டுது. எவனாவது முடியை பிடித்து செவில் மீது அடிப்பான். அப்போதுதான் அது திருந்தும்.” என பேசியிருந்தார்.
பிக் பாஸ் போட்டியாளர்கள் :
இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியானார். இவர்கள் சென்ற பின், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன்,அரவிந்த், சீரியல் நடிகர் முகமது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 17 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

