‛அசலை உள்ளே கொண்டு வாங்க... நான் இதை செய்றேன்...’ பிக்பாஸ் உடன் டீல் பேசும் நிவா!
Bigg Boss 6 Tamil: முதலில் அவருக்கு ஒன்று புரியவில்லை. வந்ததே விளையாடுவதற்கு தான். அதை நான் செய்கிறேன் என கேட்பது அபத்தமாக இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இதுவரை இருவர் எலிமினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள். முதல் வாரம் டான்ஸ் மாஸ்டர் சாந்தி வெளியேற்றப்பட்டார் . இரண்டாவது வாரத்தில் அசல் கோலார் வெளியேற்றப்பட்டார். கோலார், வீட்டில் செய்த சில கோளாறுகளால் கடுப்பான மக்கள், அவரை பெருவாரியாக ஓட்டளித்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றினர்.
குறிப்பாக, நிவாஷினி உடன் இணைந்து கொண்டு அசல் கோலார் செய்த லீலைகள் அனைத்தும், 24 மணி நேர பிக்பாஸ் ஒளிபரப்பில் அப்பட்டமாக தெரியவந்தது. போதாக்குறைக்கு கலாச்சார சீரழி என்று பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிரான கொடி பிடிக்கத் தொடங்கினர் .அதற்கு முழு மூலக்காரணமாக இருந்தது அசல் கோலார். நிவாஷினியிடம் அத்துமீறியது, வீட்டில் உள்ள பெண்களை கண்ட இடத்தில் தடவியது என அசல் கோலார் மீது அடுக்கடுக்கான பிராதுகள் பறந்து கொண்டே இருந்தது.
இதனால் தான், கடந்த வார இறுதியில் இறுதி ரேஸில் அசீம் மற்றும் அசல் கோலார் இருந்த நிலையில் , அசல் வெளியேற்றப்பட்டார். அசல் ஏன் வெளியேற்றப்பட்டார் என்பது அதன் பிறகு தான் பிக்பாஸ் போட்டியாளர்கள் உணரத் தொடங்கினர். இதை நிவாவும் புரிந்து கொண்டார். இருப்பினும், கடந்த சில நாட்களாக அசல் கோலாருடன் நெருக்கமாக இருந்ததால், அவருடைய பிரிவு, நிவாவிற்கு பெரும் அதிர்ச்சியை தந்தது.
Need Justice for Kolaaru Bro 😀
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 2, 2022
Azeem enna paavam paninaru..
pic.twitter.com/gGpDpym9O7
அசல் கோலார் வெளியேறிய போது, கதறி துடித்தது நிவா தான். அசல் சென்ற பிறகும், தன்னால் தான் அசலுக்கு இந்த நிலை நேர்ந்தது என நிவா கருதுகிறார். இதனால் அவர் அடிக்கடி பிக்பாஸ் கேமராக்கள் முன்னாள் நின்று கொண்டு, ஏதாவது புலம்பி வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இந்நிலையில், பிக்பாஸிடம் ஒரு பெரிய டீல் ஒன்றை பேசியிருக்கிறார் நிவா. அதில்,
பிக்பாஸ் நாம ஒரு டீல் பேசலாமா? நீங்க வந்து அசீமை வெறியேற்றிவிட்டு, அசலை மீண்டும் வீட்டுக்குள் கொண்டு வாங்க. நான் அசல் கூட பேசமாட்டேன். நான் அவனோட ப்ரெண்ட்ஷிப்பை கட் பண்றேன். அவன் கூட நான் பேசவே மாட்டேன். முழுவதும் விளையாட்டில் கவனம் செலுத்தி விளையாடுறேன். பைனலுக்கும் பேயிடுறேன்,’’
they are cross the rules and dirty relationship in BB
— exclusive videos of BB (@gpMuthuarmy3) October 26, 2022
kolaaaru tha vaazhuraan #kolar #Asal #AsalKolar #BiggBossTamil6 #BiggBossTamil #BiggBoss #Shivin #DisneyPlus #Ayesha pic.twitter.com/OM6HlhYITX
என்று நிவா பேசியிருக்கிறார். முதலில் அவருக்கு ஒன்று புரியவில்லை. வந்ததே விளையாடுவதற்கு தான். அதை நான் செய்கிறேன் என கேட்பது அபத்தமாக இருக்கிறது. மற்றொன்று, வந்த வேலையை செய்யாமல், கண்ட வேலையை செய்துவிட்டு, இப்போது குற்ற உணர்ச்சியில் புலம்புவது, அதை விட அபத்தம். அதை விட முக்கியமான ஒன்று, அசல் கோலாரை வெளியேற்றியது பிக்பாஸோ, கமலோ கிடையாது. பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் கோடான கோடி ரசிகர்கள். அவர்கள் வாக்களித்து தான் அசலை வெளியேற்றியிருக்கிறார்கள்.
ஏதோ, இவர்களுக்குள் டீல் முடித்து யாரை வேண்டுமானாலும் வெளியேற்றலாம், உள்ளே அழைத்துவரலாம் என்பதெல்லாம் சிறுபிள்ளைத் தனமான சிந்தனையே!