Bigg Boss 6 Tamil Promo: வேட்டைக்கு தயாரான கமல்! அசத்தல் ப்ரோமோவுடன் வெளியான பிக்பாஸ் 6!
Bigg boss season 6 : பிக் பாஸ் சீசன் 6 லோகோ மற்றும் புரோமோவை தற்போது வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.
Bigg Boss Season 6 Promo: விரைவில் உங்கள் விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6... போட்டியாளர்களாகும் பொதுமக்கள்
விஜய் டிவி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒரு புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஆம் அனைவரின் ஃபேவரட் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் சீசன் 6 விரைவில் தொடங்க உள்ளது என்பது தான் அந்த அறிவிப்பு.
வேட்டைக்கு ரெடியாகிவிட்ட உலகநாயகன்:
பிக் பாஸ் சீசன் 6 தற்போது ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு உள்ளது. பிக் பாஸ் சீசன் 4 மற்றும் சீசன் 5 அக்டோபர் மாதத்தில் தொடங்கியது போல் இந்த சீசனும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனையும் நமது ஃபேவரட் ஹீரோ கமலஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார் என்பது மற்றுமொரு சர்ப்ரைஸ். நம்ம ஹீரோ வேட்டைக்கு ரெடியாகி விட்டார். நீங்க ரெடியா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக மக்களாகிய நீங்கள் பங்கேற்க ஒரு அறிய வாய்ப்பு! 😎
— Vijay Television (@vijaytelevision) August 25, 2022
உடனே https://t.co/EebJTRrsGG Login செய்து #BIGGBOSS-இல் கலந்து கொள்வதற்கான காரணத்தை வீடியோவாக பதிவு செய்து Upload செய்யுங்கள்.. 😊 #BiggBossTamil #BBTamilSeason6 #BiggBossTamil6 #பிக்பாஸ் pic.twitter.com/63qFGQqMAq
பிக் பாஸ் சீசன் 6 புரோமோ வெளியானது :
பிக் பாஸ் சீசன் 6 லோகோ மற்றும் புரோமோவை தற்போது வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி. இந்த நிகழ்ச்சியினை இணைந்து வழங்குகிறார்கள் ப்ரீதி மற்றும் நிப்பான் பெய்ண்ட்ஸ். பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த சீசனில் பிரபலங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான விளம்பரம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது. ஷில்பா மஞ்சுநாத், தர்ஷா குப்தா, ஸ்ரீநிதி, ஷாலு ஷம்மு ஆகியோர் பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது ஆனால் அதிகாரப்பூரவமான முழுமையான தகவல் இதுவரையில் வெளியாகவில்லை. ஆனால் கூடிய விரைவில் அது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் சீசன் 6 புரோமோ இதோ உங்களுக்காக :
வேட்டைக்கு ரெடியா.. 😎 #BiggBossTamil6 விரைவில்.. @ikamalhaasan @preethiIndia @NipponIndia pic.twitter.com/3pme4NwfSQ
— Vijay Television (@vijaytelevision) September 5, 2022
பயங்கரமான எதிர்பார்ப்பு உள்ளது :
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் ஒரு நிகழ்ச்சி இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இதுவரையில் எந்த ஒரு சீசனிலும் இல்லாத அளவிற்கு மிகவும் விறுவிறுப்பாக இருந்தது என்றே சொல்லலாம். அந்த சீசன் டைட்டில் வின்னராக ராஜு ஜெயமோகன் மற்றும் ரன்னர் அப்பாக பிரியங்கா தேஷ்பாண்டே வெற்றி பெற்றனர். இந்த சீசனும் நிச்சயமாக விறுவிறுப்பாகவும் ஸ்வாரஸ்யமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள் பிக் பாஸ் ரசிகர்கள்.