Bigg Boss 6 Tamil : பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறாரா ஜி.பி முத்து...வைரலாகும் வீடியோ ரசிகர்கள் அதிர்ச்சி
Bigg Boss 6 Tamil : இந்த வாரத்தில் அஸீமிற்கு ரெட் கார்ட் கொடுப்பது போலவும், ஜி.பி முத்து தானாகவே வெளியேறுவது போலவும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.வார இறுதிநாளான இன்று அல்லது நாளை யாராவது எலிமினேட் செய்யப்படுவார்கள் என்பது உறுதி. இந்த வாரத்தின் எலிமினேஷன் நாமினேட் லிஸ்டில் ஆயிஷா, அசீம், தனலட்சுமி, மகேஸ்வரி, நிவா, குயின்சி, ரச்சித்தா, ராம், சாந்தி, ஷெரினா, ஷிவின், விக்ரமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கமாக இந்த நாமினேட் லிஸ்டில் இருப்பதிலே குறைந்த ஓட்டுகளை பெறுபவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவர். இதுதான் பிக்பாஸ் வழக்கம். ஆனால், இந்த வாரத்தில் அஸீமிற்கு ரெட் கார்ட் கொடுப்பது போலவும், ஜி.பி முத்து தானாகவே வெளியேறுவது போலவும் காட்சிகள் வெளியாகிவுள்ளது.
View this post on Instagram
இன்று, வெளியான இரண்டாவது ப்ரோமோவில், போட்டியாளர்கள் முன்னால் ரெட் கார்டுகள் வைக்கப்பட்டது கமல் இந்த ரெட் கார்டுக்கு தகுதியானவர் யார் என கேட்க, பல பேர் அஸிமை தேர்வு செய்து கொடுக்கிறார்கள். இதனால் அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவாரா அல்லது கமலின் எச்சரிக்கையை பெற்று நிகழ்ச்சியில் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விடை பெற்றார் தலைவர் 🙏#GPMuthu #GPMuthuArmy #BiggBossTamil6 pic.twitter.com/joWm3dryip
— GPMuthuArmy🧚🏽♂️ (@thamizhachi__) October 22, 2022
அதுபோக, பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனின் முதல் போட்டியாளராக களம் இறங்கி, பிக்பாஸ் வீட்டிற்குள் கால் தடம் பதித்தார் ஜி.பி முத்து. முதல் வாரம் நல்ல ஆக்டிவ் ஆக இருந்த ஜிபி முத்து இந்த வாரம் கேப்டனாக பொறுப்பேற்றார். ஆனால் தன்னால் உள்ளே இருக்க முடியவில்லை என்றும், வீட்டில் இருப்பவர்களை தேடுவதாகவும் சில தினங்களுக்கு முன் தெரிவித்தார். உடனே பிக்பாஸ் தரப்பில் வீட்டில் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள் என்றும் நீங்கள் நன்றாக விளையாட வேண்டும் என கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்போது வெளியான வீடியோவில் தன்னால் உள்ளே இருக்க முடியவில்லை. நான் இங்கு இருந்து போகிறேன் என கூற, “உங்கள் முடிவு இது, நீங்கள் போகலாம்” என பிக்பாஸ் கூறுகிறார். ஜி.பி முத்து குறித்த இந்த தகவல் அதிகாரபூர்வமானது இல்லை என்றாலும் இது சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகி வருகிறது. ஜி.பி முத்து ஒருவரே நல்ல கண்டெண்ட் கொடுத்து வந்தார். இப்போது இவரும் சென்று விட்டால். இனி பிக்பாஸ் ஷோவே மொக்கையாகிவிடும் என பிக்பாஸ் ரசிகர்கள் கூறி வருகின்றனர். மற்றொரு பக்கம், ஜி.பி முத்து ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
பிக் பாஸ் போட்டியளார்கள் :
இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நடிகை மைனா நந்தினி உள்ளே வந்துள்ளார்.