மேலும் அறிய

Bigg Boss 6 Tamil: 'வெள்ளைச் சட்டைப் போட்டா அரசியல்வாதியா?’... விக்ரமனிடம் சண்டைக்கு போன அஸீம்

இருவருக்குள்ளும் வாக்குவாதம் நடந்த போது அஸீம் ஆயிஷாவை போடி என மரியாதை இல்லாமல் பேச இருவருக்குள்ளும் சண்டை நிகழ்ந்தது.

 பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒளிபரப்பாகும் எபிசோடின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் அஸீம் மற்றும் விக்ரமன் இடையே வாக்குவாதம் நடக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின்  6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கியது. இதில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்,மைனா நந்தினி ஆகியோர் பங்கெடுத்துள்ளனர். 

முதல் வாரம் நட்பு..அதன் பின் வஞ்சகம்...தொடர்ந்து பழி தீர்த்தல் என போகும் பிக்பாஸ் வீடு இந்த முறை கொஞ்சம் அப்டேட்டாக தினம் தினம் பஞ்சாயத்துடன் தான் விடிகிறது. எபிசோடு ப்ரோமோ வந்தாலே யார் யாருக்கு சண்டை என்ற ஆர்வத்திலே பலபேர் பார்க்கும் அளவுக்கு இருக்கும். அந்த வகையில் முதல் வாரம் ஜிபி முத்து - தனலட்சுமி, நேற்று தனலட்சுமி - அசல் கோலார், விக்ரமன் - அஸீம், விக்ரமன் -ஜிபி முத்து என இந்த வார்த்தை மோதல்கள் ரவுண்டு கட்டி விளையாண்டது. 

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில் ஆயிஷாவை எதற்கும் தகுதி இல்லை என அஸீம் கூறினார். இதுதொடர்பாக இருவருக்குள்ளும் வாக்குவாதம் நடந்த போது அஸீம் ஆயிஷாவை போடி என மரியாதை இல்லாமல் பேச இருவருக்குள்ளும் சண்டை நிகழ்ந்தது. இதேபோல் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் அஸீம் விக்ரமனையும் தகுதி இல்லை என கூற அவர்  நீங்க என்ன வேலைப் பார்த்திங்க என திரும்பி கேட்கிறார். 

அதற்கு யோவ் நீங்க தான் ஜெயில்ல தூங்கிட்டு இருந்தீங்க. நான் இல்ல என அஸீம் சொல்ல, மரியாதையா பேசுங்க என விக்ரமன் எச்சரிக்கிறார். உடனே அஸிம் டென்ஷனாகி டேய் உன் வேலையை பாருடா போய் என தெரிவிக்க இருவருக்குள்ளும் சண்டை ஏற்படுகிறது. அப்போது விக்ரமன் அஸிமை பார்த்து பெரிய இளவரசன் மாதிரி வர்ற, போற..வாடா போடான்னு எல்லோரையும் சொல்லுற என தெரிவிக்கிறார். 

உடனே அஸிம் வெள்ளை சட்டைப் போட்டா என்ன பெரிய அரசியல்வாதின்னு சொல்றீங்க எனக்கு சத்தியமா புரியல என வார்த்தைகளை அள்ளி வீசுகிறார். இதனால் இன்றைய எபிசோடு ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Embed widget