Bigg Boss 6 Tamil : முதன்முறையாக கேப்டனாகி அசத்திய ஏ.டி.கே!
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி முடிய சில நாட்கள் மட்டுமே உள்ளது. இதனால், போட்டி நாளுக்கு நாள் கடினமாகி கொண்டே போகிறது.
கேப்டன்சி டாஸ்க் முதல் நாமினேஷன் வரை, இந்த வாரத்தின் முதல் நாளான இன்றைய நிகழ்ச்சியில் நடக்க போகும் சுவாரஸ்யமான விஷயங்களை பற்றி பார்க்கலாம்.
கடந்த வாரத்தில், ஏடிகே, அஸிம், அமுதவாணன், கதிரவன், மணிகண்டா, நந்தினி, ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியோர் எலிமினேஷனுக்கான நாமினிஸ்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதில், ஐஸ்வர்யா ராஜேஷை உள்ளே அழைக்கத்தான் மணிகண்டாவை உள்ளே வைத்திருக்கின்றனர் என்ற பேச்சு நெட்டிசன்கள் மத்தியில் நிலவிவந்தது. அதற்கு ஏற்றவாரு, மணிகண்டா குறைந்த ஓட்டுகளை பெற்று நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
View this post on Instagram
வாரத்தின் முதல் நாளான இன்று, சிறப்பாக விளையாடிய ஏடிகே மற்றும் அஸிம் ஆகியோர் கேப்டன்சி டாஸ்க்கில் பங்குபெற்றனர். இருவரும் மாறி, மாறி வாதிட்டனர். பின், அந்த வாதத்தில் ஏடிகே வெற்றி பெற்று கேப்டன் ஆகியுள்ளார்.
#Day85 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/IfvUIoIOvc
— Vijay Television (@vijaytelevision) January 2, 2023
பின், இந்த வாரத்தின் நாமினேஷனிலிருந்து தப்பிக்க, அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் போட்டியாளர் ஒவ்வொருவரும், அவரவர்களின் ஸ்டராங் பாயிண்டை முன் எடுத்து வைக்க வேண்டும். அதில், எந்த போட்டியாளர் சிறந்த பதில் கொடுக்கிறாரோ, அவரே இந்த வாரத்தின் எலிமினேஷனிலிருந்து தப்பிப்பார்.
#Day85 #Promo3 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/ugXxj3NrOZ
— Vijay Television (@vijaytelevision) January 2, 2023
அத்துடன், இந்த வாரத்தில் என் கேள்விக்கு என்ன பதில் என்ற டாஸ்க் நடக்கவுள்ளது. இந்த போட்டியில், கேட்கப்படும் கேள்விகளுக்கு சம்மந்தமே இல்லாத பதில்களை கொடுக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.
எஞ்சிய போட்டியாளர்கள் :
கடந்த வாரத்தில் மணிகண்டா வெளியேற, திருநங்கை ஷிவின் கணேசன், சீரியல் நடிகர் முகமது அஸிம், சரவணன் மீனாட்சி ரச்சிதா, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், விஜே கதிரவன், விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 8 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.