![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bigg Boss 6 Tamil: ‛வாடா... போடா... இன்னும் பல...’ பிக்பாஸ் வீட்டில் வசைபாடும் போட்டி.. பலர் அப்செட்!
Bigg Boss 6 Tamil : புதிதாக வெளியான இந்த ப்ரோமோ காட்சியில் வி.ஜே கதிரவன் சற்று அப்-செட்டாக உள்ளார் என்பது நன்றாக தெரிகிறது.
![Bigg Boss 6 Tamil: ‛வாடா... போடா... இன்னும் பல...’ பிக்பாஸ் வீட்டில் வசைபாடும் போட்டி.. பலர் அப்செட்! Bigg Boss 6 Tamil Day 18 Promo 3 Released Contestants fights with each other Bigg Boss 6 Tamil: ‛வாடா... போடா... இன்னும் பல...’ பிக்பாஸ் வீட்டில் வசைபாடும் போட்டி.. பலர் அப்செட்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/27/85fd9c6c950003b9a22bec5d7cebcf1e1666865984600102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நேற்று வெளியான 18வது நாளுக்கான மூன்றாம் ப்ரோமோவில், போட்டி முடிந்த களைப்பில் கடுப்பாகி ஒவ்வொருவரும் பேய் புடித்தது போல் அலச்சலில் கத்திக்கொண்டு இருக்கின்றனர்.
தீபாவளி பண்டிகையை அடுத்து, தொடர்ந்து சில நாட்களாக டால் ஹவுஸ் ஒன்றை செட்-அப் செய்த பிக்பாஸ் நிகழ்ச்சி, அதன் மூலம் போட்டியாளர்களின் வன்மம் நிறைந்த பக்கத்தை மக்களுக்கு திரையிட்டு காட்டி வருகிறது. இந்த போட்டி அறிமுகப்படுத்திய முதல் நாளில், இதெல்லாம் ஒரு டாஸ்க்கா என்று நினைத்தவர்களுக்கு, இதன் மூலம் சண்டை காட்சிகளையும், பல மீம் கண்டென்களையும் அடிக்குவருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. டாஸ்க்கை நேர்த்தியாக விளையாடுவதைவிட இவர்கள் அனைவரும் அதிகமாக சண்டை போட்டு வருவதை உலகமே பார்த்து சிரித்து வருகிறது. சில காட்சிகள் சிரிப்பாக இருந்தாலும், பல காட்சிகள் பயங்கர டெரர்ராக இருக்கிறது என்றே சொல்லலாம்.
View this post on Instagram
மன்னிப்பு கேளு.. சீன் போட்ற..ஏய் போயா.. உன்ன மாதிரி என்னால கத்த முடியாது.. வாடா..போடா என பல ஒருமை வார்தைகள் இந்த ப்ரோமோவில் நிறைந்துள்ளது. பல கோடி மக்கள் தங்களை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர் என்பதை அறிந்துக்கொண்டே கொஞ்சம் சின்னபுள்ளத்தனமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கால் வாசி நபர்கள் கத்திக்கொண்டு சண்டை போட்டால், மீதம் உள்ளவர்கள் இவர்கள் போடும் சண்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். புதிதாக வெளியான இந்த ப்ரோமோ காட்சியில் வி.ஜே கதிரவன் இதையெல்லாம் பார்த்து சற்று அப்-செட்டாக உள்ளார் என்பது தெரிகிறது.
போட்டியில் பங்குபெற்ற ஜி.பி முத்து தானாகவே போட்டியில் இருந்து விலகினார். அதுபோக, நடிகை சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். இவர்கள் இருவர் போக, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்,மைனா நந்தினி ஆகிய 19 நபர்கள் உள்ளனர்.
மேலும் படிக்க : இது வில்லா அல்லது உடம்பா... யோகாவில் களம் இறங்கிய லொஸ்லியாவின் லேட்டஸ்ட் கிளிக்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)