Bigg Boss 6 Tamil : பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட ராம் மற்றும் ஆயிஷா.. இது நியாயமா? ஆதங்கத்தில் ரசிகர்கள்
Bigg Boss 6 Tamil : இது நியாமமே இல்லை என்றும் ஆயிஷா ஒரு சிறந்த போட்டியாளர் என்றும் தங்களின் ஆதங்கத்தை ஆயிஷா ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதன் முறையாக டபுள் எவிக்ஷன் நடந்துள்ளது. கதிரவன், ராம், ஜனனி, ஏடிகே, அஸிம், ஆயிஷா ஆகியோர் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினீஸ்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் குயின்சி வெளியாக, இந்த வாரம் வெளியாக போகும் அந்த இருநபர்கள் யார் என்ற கேள்வியுடன் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது பிக்பாஸ் சீசன் 6. அஸிமுக்கு முன்னதாகவே, அதிக ஓட்டுகள் இருப்பதால் அவர் இதில் முதலில் காப்பாற்றப்படுவார். இவருக்கு அடுத்த படியாக கதிரவனும், ஜனனியும் உள்ளனர் அதனால் இவர்கள் இருவரும் டபுள் எவிக்ஷனில் இருந்து காப்பாற்றப்பட்டு விடுவர்.
இதற்கு அடுத்த படியாக இருக்கும், ராம் மற்றும் ஆயிஷா உள்ளனர். நேற்று வரை, இவர்கள் இருவரும் குறைந்த ஓட்டுகளை பெற்று இருந்தனர். அதனால், ஆயிஷாவின் ரசிகர்கள் பலர் அவரை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வந்தனர். ஆயிஷா ஒரு சிறந்த போட்டியாளர் என்றும் அவர் உள்ளே இருக்க தகுதியானவர் என்றும் ட்வீட் செய்து அவருக்காக வாக்குகளை சேமித்து வந்தனர். இப்படியாக ஆயிஷாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தாலும், வாக்குகளில் எந்தவொரு பெரிய மாற்றமும் காணப்படவில்லை.
Exclusive Update of Bigboss S6 Tamil- Double Eviction👍
— Suriya Fans Rage (@_AkashSFC) December 9, 2022
Ayesha and Ram will be Eliminated from the Bigboss house.#BigBossTamil6 #Bigboss
ஆகையால் ராம் மற்றும் ஆயிஷா வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்ப்பு நிலவிவந்தது. அதற்கேற்ற படி, இவர்கள் இருவரும் தற்போது வெளியாகிவுள்ளனர் என்ற தகவல் வந்துள்ளது.
ஆயிஷா வெளியேற்றப்பட்டது நியாயமா?
முதல் நாளிலிருந்து ராம், பெரிதாக விளையாடவில்லை என்றாலும் கடந்த இரு வாரங்களாக தனது கேம் ப்ளேவினை தொடங்கினார். தனக்கு கொடுக்கபட்ட வாய்ப்பினை முதலில் இருந்து சரியாக செய்து இருந்தால் ராமிற்கு இந்த நிலைமை வந்து இருக்காது.
View this post on Instagram
இவருடன் குறைந்த ஓட்டுகளை பெற்று ஆயிஷாவும் வெளியேறிவுள்ளார். இந்த விஷயம் அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. டாஸ்க்குகளை முறையாக விளையாடும் இவரை விட, மற்றவர்களின் பேச்சை கேட்டு விளையாடும் ஜனனிக்கு ஏன் இவ்வளவு வாக்குகளை மக்கள் அளித்துள்ளனர் என்பது ஆச்சர்யமாக உள்ளது. ஜனனிக்கு ஆயிஷாவை விட, அதிக ரசிகர்கள் உள்ளனர் என்பது கூட ஆயிஷா வெளியேறியதற்கான ஒரு காரணமாக இருக்கலாம்.
மேலும் படிக்க : Vijay Gifts Yogi Babu : யோகிபாபுவிற்கு கிரிக்கெட் பேட்டை பரிசளித்த தளபதி விஜய்...! விலை என்ன..? காரணம் என்ன..?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

