Vijay Gifts Yogi Babu : யோகிபாபுவிற்கு கிரிக்கெட் பேட்டை பரிசளித்த தளபதி விஜய்...! விலை என்ன..? காரணம் என்ன..?
Vijay Gifts YogiBabu: நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கு கிரிக்கெட் பேட் ஒன்றை பிரபல நடிகர் விஜய் பரிசளித்துள்ளார்.
![Vijay Gifts Yogi Babu : யோகிபாபுவிற்கு கிரிக்கெட் பேட்டை பரிசளித்த தளபதி விஜய்...! விலை என்ன..? காரணம் என்ன..? Vijay gifts expensive cricket bat to yogi babu Vijay Gifts Yogi Babu : யோகிபாபுவிற்கு கிரிக்கெட் பேட்டை பரிசளித்த தளபதி விஜய்...! விலை என்ன..? காரணம் என்ன..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/10/754773b582d41ddbc950e41441188b691670652728066572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வாரவாரம் வெள்ளிக்கிழமையானால் 4 படங்கள் வெளியாகும் வாடிக்கை இருந்து வருகிறது. அந்த 4 படங்களில், 3 படத்திலாவது யோகி பாபு நடித்துவிடுகிறார். இப்படியாக தனது தோற்றத்தை வைத்தே புதுவிதமான பாணியை உருவாக்கி பல திரைப்படங்களில் நடித்து எக்கசக்கமான ரசிகர்களை தன் வசத்தில் வைத்துள்ளார் யோகிபாபு.
விஜய் தந்த பரிசு:
சமீபத்தில், யோகிபாபு திரையுலகிற்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சூர்யா 42 படப்பிடிப்பில் கேக் வெட்டி அவரது 13 ஆண்டு சினிமா பயணத்தை கொண்டாடினர். அந்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டானது.
View this post on Instagram
தற்போது, கோலிவுட்டின் உச்சத்தில் உள்ள நடிகர் விஜய், யோகி பாபுவிற்கு கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். பரிசளித்த பேட்டினை கையில் வைத்து கொண்ட யோகி பாபு, அதனை அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
அந்த பதிவின் கீழ், பல விஜய் ரசிகர்கள், விஜயை வாழ்த்தி வருகின்றனர். சிலர், அந்த பேட்டின் விலை 52,000 ரூபாய் என்ற கமெண்டினை பதிவிட்டுள்ளனர். இதுவரை, மெர்சல், பிகில், பீஸ்ட் ஆகிய படங்களில் விஜய்யுடன் இணைந்து யோகி பாபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
View this post on Instagram
சில மக்கள், கிரிக்கெட் பேட்டினை எதற்கு பரிசாக கொடுக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பிவருகின்றனர். ஒரு வேளை யோகிபாபுவிற்கு கிரிக்கெட் பிடித்து இருக்கலாம். அல்லது, மெர்சல் படத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் விஜய்யை அழைத்து செல்ல யோகிபாபு வருவது போல் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும், அந்த காட்சியை நினைவுபடுத்தும் விதமாக இந்த பேட்டை பரிசினை அவர் கொடுத்து இருக்கலாம் என்பது நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)