மேலும் அறிய

Bigg Boss 6 Tamil: 'எதுக்கு என்னை வாடி போடி’ன்னு சொல்றீங்க...அஸீமிடம் எகிறிய ஆயிஷா...ரணகளமாகும் பிக்பாஸ் வீடு

முதல் வாரம் நட்பு..அதன் பின் வஞ்சகம்...தொடர்ந்து பழி தீர்த்தல் என போகும் பிக்பாஸ் வீடு இந்த முறை கொஞ்சம் அப்டேட்டாக தினம் தினம் பஞ்சாயத்துடன் தான் விடிகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒளிபரப்பாகும் எபிசோடின் முதல் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின்  6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கியது. இதில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்,மைனா நந்தினி ஆகியோர் பங்கெடுத்துள்ளனர். 

முதல் வாரம் நட்பு..அதன் பின் வஞ்சகம்...தொடர்ந்து பழி தீர்த்தல் என போகும் பிக்பாஸ் வீடு இந்த முறை கொஞ்சம் அப்டேட்டாக தினம் தினம் பஞ்சாயத்துடன் தான் விடிகிறது. எபிசோடு ப்ரோமோ வந்தாலே யார் யாருக்கு சண்டை என்ற ஆர்வத்திலே பலபேர் பார்க்கும் அளவுக்கு இருக்கும். அந்த வகையில் முதல் வாரம் ஜிபி முத்து - தனலட்சுமி, நேற்று தனலட்சுமி - அசல் கோலார், விக்ரமன் - அஸீம், விக்ரமன் -ஜிபி முத்து என இந்த வார்த்தை மோதல்கள் ரவுண்டு கட்டி விளையாண்டது. 

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் போட்டியாளர்கள் 1 முதல் 13 எண் வரை பட்டியலிட வேண்டும். இதில் விஜே மகேஸ்வரி, சாந்தி, குயின்ஸி, ரச்சிதா, ஏடிகே, விக்ரமன், ஷெரின் ஷாம்,ஜனனி, ஆயிஷா, ராம் ராமசாமி, அசல் என அனைவரும் 1ல் இருந்து வரிசையாக நிற்கிறார்கள். அப்போது அஸீம் முன்னால் வந்து விஜே மகேஸ்வரி, விக்ரமன், ஆயிஷா ஆகியோரை குறிப்பிட்டு  தகுதி இல்லாத நிறைய பேர் இங்க நிக்குறாங்க. குறிப்பாக ஆயிஷாவுக்கு சுத்தமா தகுதி இல்ல என சொல்கிறார். 

உடனே தகுதியில்லன்னு என்ன அடிப்படையில சொல்றீங்க என கேட்க, நீ தூக்கத்தை தவிர என்ன பண்ண என ஆயிஷாவிடம் அஸீம் எகிறுகிறார். நீங்க மட்டும் தூங்கலையா என ஆயிஷா கேட்க, கத்தி பேசுற வேலையெல்லாம் வேண்டாம் என அஸீம் தெரிவிக்கிறார். எனக்கு வாய்ஸ் இருக்கு நான் பேசுறேன் என ஆயிஷா சொல்ல, உனக்கு சவுண்டு இருக்குன்னா எனக்கும் தான் இருக்கு போடி என அஸீம் கோபப்படுகிறார். 

உடனே ஏன் வாடி போடின்னு பேசுறீங்க..நான் வாங்க போங்கன்னு தானே உங்களை பேசுறேன் என ஆயிஷா அஸீமிடம் சண்டைக்கு செல்வது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 

தலைப்பு செய்திகள்

CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
Embed widget