Bigg Boss 5 Tamil: ‛அடி... அடி... அடி... உடம்பே மரத்து போச்சு...’ கண்ணீர் கதறலுடன் கதை சொன்ன திருநங்கை நமீதா!
Bigg Boss 5 Tamil Promo: பெத்தவங்க பொறுப்பில்ல... மத்தவங்க பொறுப்பில்ல... உலகத்துல...’’ என நமீதா மாரிமுத்து கண்ணீர் தழும்ப கதறி அழுதார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாக்கும் பிக்பாஸ் 5 சீசனில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களின் வாழ்க்கை விபரத்தை கூறும் டாஸ்க் நடந்து வருகிறது. இன்றைய ஒளிரப்பில் அதன் தொடர்ச்சி இடம் பெற உள்ளது. அதற்கான ப்ரமோ சற்று முன் வெளியானது அதில் திருநங்கை நமிதா தனது வாழ்க்கையில் நடந்ததை கதறி கதறி கூறும் காட்சிகள் அதில் இடம் பெற்றன. இதோ அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள அவரது நெகிழ வைக்கும் பேச்சு...
‛‛எங்கம்மா சொல்லி சொல்லி வளர்த்தாங்க என்னிடம்..... வாழ்கையில் மத்திவங்களிடம் குறை இருந்தாலும், அவங்களை ஏற்று வாழனும்னு... ஆனால் அவங்க என்னை ஏத்துக்கல... அடி அடி அடி...னு அடிச்சு எனக்கு உடம்பே மரத்துப் போனது. இந்த சமுதாயத்தில் திருநங்கைகளை பாலியலுக்கும், பிச்சையெடுப்பதற்கும் தான் என பார்க்கிறார்கள். இதுக்கெல்லாம் காரணம் பெத்தவங்க மட்டும் தான். வேறு யாருமே இல்ல...! மாறுங்க மாறுங்கனு... சொல்றாங்க... முதலில் நீங்க மாறுங்க... நாங்கலெல்லாம் எப்பவோ மாறிட்டோம். பெத்தவங்க பொறுப்பில்ல... மத்தவங்க பொறுப்பில்ல... உலகத்துல...’’ என நமீதா மாரிமுத்து கண்ணீர் தழும்ப கதறி அழ.. ஒட்டுமொத்த போட்டியாளர்களும் அவருக்கு இணையாக கதறி அழுது அவரை கட்டியணைத்த தேற்றும் ப்ரமோ டச்சிங் ரகமாக இருந்தது.
#Day4 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/jJCATm31r2
— Vijay Television (@vijaytelevision) October 7, 2021
நமீதாவின் இந்த கதை விளக்கத்திற்கு பின் அவருக்கு எந்த அளவிற்கு சக போட்டியாளர்கள் மதிப்பெண் வழங்க உள்ளனர். லைக், ஹார்ட், டிஸ் லைக் என மூன்ற விதமான மதிப்பெண் வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது. இதில் எந்த மதிப்பெண்ணை வழங்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் பல போட்டியாளர்களின் சுய வாழ்க்கை சம்பவங்கள்.. சுவாரஸ்ய நிகழ்வுகளும்...!
என் அப்பாவுக்கும், என் அம்மாவுடைய அப்பாவுக்கும் ஒரே வயசு.. கண்ணீரால் கரைத்த சுருதி..#SuruthiPeriyasamy #BiggbossTamil5 #Imman #Chinnaponnu https://t.co/jjcEPDLDep
— ABP Nadu (@abpnadu) October 7, 2021
ராஜூ பாயைக் கலாய்த்த பிரியங்கா... முதல்ல இத செய்யுங்க.. பிரியங்காவுக்கு உத்தரவிட்ட பிக்பாஸ்#BiggBossTamil5 https://t.co/FVldKyJI9J
— ABP Nadu (@abpnadu) October 6, 2021