Bigg Boss 5 Tamil: இந்த வாரம் வெளியேறுகிறாரா சுருதி... ராஜூ சொன்ன ட்விஸ்ட்: இன்று தெரியும் ரிசல்ட்!
உறுதியான தகவல்... இன்று இரவு கமல் சட்டையிலிருக்கும் அட்டையில் தெரிந்து விடும்!
தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ என்கிற வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது. 34ம் நாளான நவம்பர் 6 அன்று சனிக்கிழமை என்பதால் ஒரு வார நிகழ்ச்சியின் தன்மை குறித்து பேச தொகுப்பாளர் கமல் வருகை தந்திருந்தார்.
வழக்கம் போல, அவரது முன்ரை முடிந்ததும், வெள்ளிக்கிழமை நிகழ்வுகளுடன் பிக்பாஸ் வீடு திறந்தது.
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்மறு கும்மறு கும்மறு
கும்மாறா....
என விடியல் பாடல் ஒலிக்க... காலைப் பொழுதோடு பிக்பாஸ் வீடு எழுந்தது. துவக்கமே லென்ஸ்கார்ட் விளம்பரத்திற்கு சில நிமிடங்கள். லென்ஸ்கார்ட் கண்ணாடிகளை அணிந்து போட்டியாளர்களின் பேஷன் ஷோ நடைபெற்றது. ராஜூ-மதுமிதா நடுவர்களாக இருக்க, சக போட்டியாளர்களின் அணி வகுப்பில் சிறப்பாக செயல்பட்ட ஆண்கள் பிரிவில் வருண், பெண்கள் பிரிவில் ஐக்கி பிரிவில் சுருதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு வழக்கம் போல லென்ஸ்கார்ட் பரிசு வழங்கப்பட்டது.
பின்னர் இரவில் ஒன்று கூடிய பிக்பாஸ் போட்டியாளர்கள், இமான் அண்ணாச்சியின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அதன் பின் பஞ்சாயத்தை தொடங்கினார் கமல். தாமரை-பாவனி இடையே நடந்த பால் பஞ்சாயத்தை அவர் தொடங்கியது தான் தாமதம், ஒரு அதிகாரி இருக்கிறாருங்கிற பயம் கொஞ்சம் கூட இல்லாமல், இருவரும் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோபத்தில் பட்டு பட்டுனு பேசிடுறேன் சார் என தாமரை கூற, ‛படாமல்’ பேசுங்க... என்று அடிதடி வழக்காக அதை மாற்றினார் கமல். நினைத்தது போலவே இறுதியில் தாமரை-பாவனி இடையே பற்றிய தீ கொளுந்துவிட்டு எரிந்தது தான் பாக்கி.
பின்னர் இடைவெளிக்குப் பின் அகடிவி வழியே அகத்திற்குள் சென்ற கமல், கடந்த முறை நிலம் டோக்கன் வைத்திருந்ததால் சிறப்பு ஆற்றல் வழங்கப்பட்ட நிரூப் குறித்து போட்டியாளர்களிடம் கருத்துக்களை கேட்டார். பின்னர் கடந்த வார ஆற்றல் சக்தி பெற்ற நெருப்பு இசைவாணி மற்றும் நிலம் நிரூப் செயல்பாடு குறித்து போட்டியளர்களிடம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.அதில் பெரும்பாலானோர் நிரூப் செயல்பாடு நன்றாக இருந்ததாக ஓட்டளித்தனர்.
அதன் பின் அண்ணாச்சி... இசைவாணி... வருண்... சுபி.. என அனைவரிடத்திலும் கடந்த வாரம் நடந்த டாஸ்க் குறித்தும், அதில் அவர்களின் ஈடுபாடு குறித்தும் அறிவுரைகள், பாராட்டுகள் அனைத்தையும் கூறிமுடித்தார். பின்னர் இறுதியில் ஒவ்வொரு போட்டியாளர்களிடத்திலும் இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார்கள் என்று கமல் கேட்ட போது, ஒவ்வொருவரும் ஒருவர் பெயரைக் கூற, ராஜூ மட்டும் பாவனி அல்லது சுருதி என கூறினார். கடந்த வாரம் தாமரையிடம் அருவெருப்பாக அவர்கள் நடந்து கொண்டதால் அதனால் அவர்களின் வெளியேற்றம் இருக்கலாம் என கூறினார்.
பெரும்பாலும் ராஜூ சொன்ன முடிவே இருக்கும் என்று தெரிகிறது. அதற்கு ஏற்றார் போல, நிரூப், இசைவாணி ஆகியோர் காப்பாற்றப்பட்டனர். அதன் அடிப்படையில் வெளியேறப் போவது யார் என்கிற தகவல் ஓரளவிற்கு கசிய ஆரம்பித்து விட்டது. அதன் அடிப்படையில் சுருதி, இந்த வாரம் வெளியேற்றப்படலாம். உறுதியான தகவல்... இன்று இரவு கமல் சட்டையிலிருக்கும் அட்டையில் தெரிந்து விடும்!