Bigg Boss 5 Tamil Promo: இரண்டாக பிரிந்த பிக் பாஸ் வீடு ; மோதலில் தொடங்கும் ’செண்பகமே செண்பகமே’ டாஸ்க்!
அடுத்த வார தலைவருக்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் ‘செண்பகமே செண்பகமே’ டாஸ்க் நடைபெற்றுள்ளது.
Bigg Boss 5 Tamil Day 33 Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அக்டோபர் 31-ம் தேதி எபிசோடின் முடிவில் சின்னப்பொன்னு வெளியேற்றப்பட்டார். நாடியா, அபிஷேக்கை அடுத்து சின்னப்பொன்னு மூன்றாவதாக எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில், தீபாவளி நாளான நேற்று பிக் பாஸ் சிறப்பு எபிசோட் நான்கு மணி நேரம் ஒளிபரப்பானது.
அதனை அடுத்து, 33வது நாளுக்கான இரண்டாவ்து ப்ரொமோ சற்றுமுன் வெளியானது. இதில், அடுத்த வார தலைவருக்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் ‘செண்பகமே செண்பகமே’ டாஸ்க் நடைபெற்றுள்ளது. இந்த விளையாட்டை விளையாட பிக் பாஸ் போட்டியாளர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ப்ளூ மற்றும் ஆரஞ்சு ஆர்மியாக பிரிந்து போட்டியிடும் இந்த டாஸ்க்கால் பிக் பாஸ் வீடே களேபரம் ஆகிறது. இரு அணியினரும் கார்டன் ஏரியாவில் உள்ள பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் பொம்மை கரவை மாட்டில் இருந்து பெல் அடிக்கும்போது பால் கரக்க வேண்டும். அதிகமாக பால் சேகரிப்பவர் வெற்றி அணியாக தேர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இரு அணியினரும் மிக தீவிரமாக விளையாடி உள்ள காட்சிகள் இந்த ப்ரொமோவில் வெளியாகியுள்ளது.
இதோ அந்த ப்ரொமோ வீடியோ உங்கள் பார்வைக்கு..
#Day33 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/tjnqa3XRPQ
— Vijay Television (@vijaytelevision) November 5, 2021
ப்ரொமோ:1
#Day33 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/p7bL1MNaZS
— Vijay Television (@vijaytelevision) November 5, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்