Bigg Boss 5 Tamil Promo: ‛பிடிக்கும் ஆனா... பிடிக்காது...’ வழக்கமான நாமினேஷன் ஸ்டார்ட்... இந்த முறை எரிக்கிறாங்க!
இந்த சீசனில் நாடியாவை அடுத்து இரண்டாவது எலிமினேஷனை சந்திதுள்ள பிக் பாஸ் வீட்டில், இந்த வாரத்திற்கான நாமினேஷனை போட்டியாளர்கள் இன்று பதிவு செய்துள்ளனர்.
![Bigg Boss 5 Tamil Promo: ‛பிடிக்கும் ஆனா... பிடிக்காது...’ வழக்கமான நாமினேஷன் ஸ்டார்ட்... இந்த முறை எரிக்கிறாங்க! Bigg Boss 5 Tamil Day 22 Promo 1 Contestants nominate each other for this week Bigg Boss 5 Tamil Promo: ‛பிடிக்கும் ஆனா... பிடிக்காது...’ வழக்கமான நாமினேஷன் ஸ்டார்ட்... இந்த முறை எரிக்கிறாங்க!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/25/b688218eeefdc488f18ad9b9b41376fc_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Bigg Boss 5 Tamil Day 22 Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அக்டோபர் 24-ம் தேதி எபிசோடில் வெளியேறப்போவது அபிஷேக்கா, சின்னப்பொன்னா, ஐக்கி பெரியா என்ற நிலையில் இருந்தபோது அபிஷேக் வெளியேற்றப்பட்டார். இந்த சீசனில் நாடியாவை அடுத்து இரண்டாவது எலிமினேஷனை சந்திதுள்ள பிக் பாஸ் வீட்டில், இந்த வாரத்திற்கான நாமினேஷனை போட்டியாளர்கள் இன்று பதிவு செய்துள்ளனர்.
போட்டியாளர்கள் ஒவ்வொருவராக நாமினேட்டாகி வெளியேறி வருவதால், இந்த வார நாமினேஷன் பல திருப்பங்களை கொண்டிருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 22-வது நாளுக்கான முதல் ப்ரொமோ சற்றுமுன் வெளியானது. இதில், ப்ரியங்கா சின்னப்பொன்னுவை நாமினேட் செய்கிறார், அவரைத் தொடர்ந்து சின்னப்பொன்னு ப்ரியங்காவை நாமினேட் செய்கிறார். அடுத்து, பாவனி இன்னும் அக்ஷராவை மறக்கவில்லை. இந்த வாரமும் அவரையே நாமினேட் செய்திருக்கிறார். அதே போல, இம்மான் அண்ணாச்சி இசைவானியையும், இசை அண்ணாச்சியையும் மாறி மாறி நாமினேட் செய்து கொள்கின்றனர். இதனால், இந்த வார நாமினேஷனுக்கு பிறகு அதிக மோதல்களும், எதிர்ப்பாராத விரிசல்களும் இருக்கும் என தெரிகிறது.
இதோ அந்த ப்ரொமோ வீடியோ உங்கள் பார்வைக்கு..
#Day22 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/AjuIcFOJ6o
— Vijay Television (@vijaytelevision) October 25, 2021
நேற்றைய எபிசோடில் நடந்ததை தெரிந்து கொள்ள:
Biggboss Tamil 5 | வெளியேற்றப்பட்டார் அபிஷேக்.. ப்ரியங்கா-நிரூப் காம்போ உடைகிறதா?#BiggbossTamil5 #Abishek #Niroop #Priyankahttps://t.co/dpTpoKTOZ0
— ABP Nadu (@abpnadu) October 24, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)