Biggboss Akshara Reddy | 2006-இல் நடித்த படம்.. தங்க கடத்தலில் தொடர்பு.. உண்மையான பெயர்.. அக்ஷரா ரிசர்ச் ஆர்மி இருக்கா என்ன?
பிக் பாஸ் சீசன் 5 இல் பிரபலமாகி இருக்கும் அக்ஷராவின் ஆரம்ப கால திரைவாழ்க்கை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் அவர் இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் காட்டிக்கொள்ளாத தகவல்கள் வந்துள்ளன.
![Biggboss Akshara Reddy | 2006-இல் நடித்த படம்.. தங்க கடத்தலில் தொடர்பு.. உண்மையான பெயர்.. அக்ஷரா ரிசர்ச் ஆர்மி இருக்கா என்ன? 'Big Boss Akshara' 2006 film; Contact in Kerala gold smuggling! What is the real name? Biggboss Akshara Reddy | 2006-இல் நடித்த படம்.. தங்க கடத்தலில் தொடர்பு.. உண்மையான பெயர்.. அக்ஷரா ரிசர்ச் ஆர்மி இருக்கா என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/23/9fdcc3fb24a42218f042dc354b245c56_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஐம்பதாவது நாளை எட்டியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ஏற்கனவே வெளியேறிய போட்டியாளரான அபிஷேக் ராஜா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இன்னொரு Wild-card Entry இருப்பதாக கூறுகின்றனர். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான முகங்களை விட பரிச்சயமில்லாத பல புதுமுக போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் அக்ஷராவும் ஒருவர். பொதுவாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய உடனே ஆர்மி தொடங்குவது வழக்கம். இந்த முறை ரசிகர்களின் பட்டியலில் பவானி ரெட்டிக்கு அடுத்தபடியாக இருப்பது அக்ஷராதான். இந்த சீசன் இதுவரை பெரிய அளவு சுவாரசியம் இல்லாமல் சென்று கொண்டிருந்தாலும் அதில் அக்ஷரா ரெட்டிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் இவரை அந்த காலத்து அமலா என்று பட்டம் கொடுத்தார் ராஜு.
அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளரான வருண் என்பவருடன் காதலில் விழுந்து விட்டதாகவும் நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்த சீசன் ஆரம்பித்த புதிதில் இவரை குறித்து சோஷியல் மீடியாவில் தேடுவதிலேயே ரசிகர்கள் அதிக கவனம் செலுத்தி வந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் என்னுடைய கம்ஃபோர்ட் சோனை விட்டு வெளியில் வந்து யார் என்று தெரியாத நபர்களுடன் இருப்பது யாராவது, என்னை பிடிக்கவில்லை முகத்திற்கு நேராக சொல்வது, இதையெல்லாம் என்னுடைய வாழ்க்கையில் முதன்முறையாக இங்கு தான் பார்க்கிறேன் என்று கூறியிருந்தார் அக்ஷரா. ஆனால், இவர் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வில்லா டு வில்லேஜ்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அக்ஷரா இரண்டாம் இடத்தை பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல அக்ஷரா ‘happy newyear’ என்ற ஷார்ட் பிலிமில் கூட நடித்து உள்ளார்.
மேலும், இவரது உண்மையான பெயர் பிரீத்தி வர்மா. இவர் 2013-ஆம் ஆண்டு கேரள தங்க கடத்தல் விவாகரத்தில் கூட தொடர்பு இருப்பதாக இவரிடம் விசாரணை கூட நடந்தது. ஆனால், தங்க கடத்தலில் ஈடுபட்ட பயாஸ் என்பவரை என் நண்பர்களின் மூலம் எனக்கு தெரியும். ஆனால் எனக்கும் இந்த தங்க கடத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருந்தார். ஆனால், தான் நடித்த படங்கள் குறித்தோ பெயர் மாற்றியது குறித்தோ அக்ஷரா இது வரை வாய் திறந்தது இல்லை. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தால் இவருக்கு கண்டிப்பாக ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வரும். ஆனால் அதற்கு முன்னதாகவே அக்ஷரா ரெட்டி கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாக இருந்து வந்தது. 2006 ஆம் ஆண்டு புதுமுக நடிகர்களுடன் ஜோடியாக தீண்ட தீண்ட என்ற படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்து இருக்கிறார். ஆனால், அந்த படத்தில் பிரீத்தி வர்மா என்ற பெயரில்தான் நடித்துள்ளார் அக்ஷரா. அந்த படத்தில் நடிக்கும்போதே பார்ப்பதற்கு பருவப்பெண் போல் இருக்கும் அக்ஷரா ரெட்டிக்கு இப்போது என்ன வயசு இருக்கும் என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)