‛பிக்பாஸ் நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்டேன்’ - நடிகை ரம்யா பாண்டியன் ஓபன் டாக்!
Ramya Pandian on Bigg Boss: "குக் வித் கோமாளி நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜாலியாகவும் இருக்கும்" -ரம்யா பாண்டியன்
![‛பிக்பாஸ் நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்டேன்’ - நடிகை ரம்யா பாண்டியன் ஓபன் டாக்! Actress ramya pandian opens up about bigg boss tamil reality show ‛பிக்பாஸ் நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்டேன்’ - நடிகை ரம்யா பாண்டியன் ஓபன் டாக்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/07/dcdcc4c9c516f7ae41613daa6f1b9efe_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான டம்மி பட்டாசு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதன் பிறகு பிரபல இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தின் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த படம் தேசிய விருதை வென்றதும் குறிப்பிடத்தக்கது. என்னதான் ரம்யா பாண்டியன் திரைக்குடும்ப பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் ( நடிகர் அருண்பாண்டியன் , ரம்யா பாண்டியனின் சித்தப்பா ) , தனக்கான வாய்ப்பிற்காக நடிகை ரம்யா தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார். ஜோக்கர் படத்திற்கு பிறகு ரம்யா பாண்டியன் நடத்திய ஃபோட்டோ ஷூட்தான் அவரை கூடுதல் பிரபமடைய செய்தது. அதன் பிறகு குக் வித் கோமாளி என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் மூலமாகவும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். அதன் பிறகு பிக்பாஸ் சீசன் 4 இல் பங்கேற்றார் .
View this post on Instagram
இந்நிலையில் தான் பிக்பாஸில் பங்கேற்றது தொடர்பாக வெளிப்படையாக பேசிய ரம்யா பாண்டியன். “பிக்பாஸில் பங்கேற்றால் பட வாய்ப்புகள் கிடைக்கும் என எண்ணிதான் கலந்துக்கொண்டேன்,ஆனால் அதில் பங்கேற்றதன் மூலம் நிறைய பாதிக்கப்பட்டேன். பிக்பாஸை விட குக் வித் கோமாளியே சிறந்தது. அதில் எனக்கு ரசிகர்களிடமிருந்து எந்த வெறுப்பும் வராது. மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜாலியாகவும் இருக்கும் “ என தெரிவித்துள்ளார். முன்னதாக நடிகர் சக்தி வாசுவும் , இதே போலதான் பிக்பாஸால் தான் வாழ்க்கையில் கடுமையான இன்னலுக்கு உள்ளானதாக தெரிவித்தார்.
View this post on Instagram
ரம்யா பாண்டியன் நடிப்பில் தற்போது “ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்” வெளியாகியுள்ளது. ஜோக்கர் படத்தில் வரும் ரம்யா பாண்டியனை நினைவு கூறும் விதத்தில் கதாபாத்திரம் அமைந்திருந்தாலும் , படத்தில் வீராயி என்ற கிராமத்து பெண்ணாக நடித்து அசத்தியிருக்கிறார். இந்த படத்தை நடிகர் சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.இயல்பான நடிப்பால் மீண்டும் பலரையும் கவர்ந்திருக்கிறார் ரம்யா பாண்டியன் .
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)