Biggboss Tamil 5 Promo 3 | குறும்படத்த போடுங்க பிக்பாஸ்.. குறும்படத்தை போடுங்க - கூப்பாடு போட்ட அபிஷேக்
ஜிங்க்கில் போடப்பட்ட பாத்திரம் மட்டும்தான் கழுவுவோம். அங்கே இங்கே இருந்தா அதை நாங்க பாக்கமுடியாது என ப்ரியங்காவிடம் சொல்கிறார் நமிதா
நேற்று எபிசோடில் டாய்லெட்டை எப்படிப் பயன்படுத்தவேண்டும், சுத்தமாக வைக்கவேண்டும் என க்ளாஸ் எடுத்தார் ராஜு மோகன். இன்று 3 ப்ரோமோவில் இன்னொரு லெசன் வந்துவிட்டது மக்களே. ஜிங்க்கில் போடப்பட்ட பாத்திரம் மட்டும்தான் கழுவுவோம். அங்கே இங்கே இருந்தா அதை நாங்க பாக்கமுடியாது என ப்ரியங்காவிடம் சொல்கிறார் நமிதா. ப்ரியங்கா வெராண்டாவில் வந்து, ”எல்லா பாத்திரங்களும் சிங்கில் போடணும். காபி கப்புகளை ஜிங்கில் போட்டாதான் கழுவமுடியும்.” என்றார். உடனே அபிஷேக் எழுந்து, குறும்படம் போடுங்க பிக்பாஸ், குறும்படம் போடுங்க பிக்பாஸ். நான் நிறைய காபி கப்ஸ் எடுத்துட்டுபோய் போட்டேன் என்கிறார்.
View this post on Instagram
முன்னதாக, வாழ்வதற்கு தான் சந்தித்த துயரங்கள் அதில் அடக்கம் என அழுது உடைந்த பவனியை மதுமிதா தேற்றுகிறார். தூரத்திலிருந்து எங்கேயோ அதை பார்த்த ப்ரியங்கா... நேராய் அவர்களிடம் வந்து ‛ஏன் அழுற... நீ அழுததை நான் பார்த்தேன்...’ என ப்ரியங்கா கேட்க, என்ன சொல்வது என தெரியாமல் இருவரும் விழிக்கிறார்கள். ‛ஆந்திரா சோறு வேணுமா...’ என ப்ரியங்கா கேட்க... ‛ஆமாம்... என’ பவனி சொல்ல, ‛இமான் அண்ணாச்சி காரம் என ஏதோ வைத்திருப்பதாகவும்... அதன் உள்ளே நாக்கை விட்டு... நக்கி நக்கி பாரு... அதுக்கு அப்புறம் ஆந்திரா சாப்பாடே கேட்க மாட்ட...’ என ப்ரியங்கா கூற, அதுவரை அழுதுகொண்டிருந்த பவனி, விழுந்து சிரிக்கத் தொடங்கினார்.
முன்னதாக முதல் ப்ரோமோவில், ‛‛எங்கம்மா சொல்லி சொல்லி வளர்த்தாங்க என்னிடம்..... வாழ்கையில் மத்தவங்களிடம் குறை இருந்தாலும், அவங்களை ஏற்று வாழணும்னு... ஆனால் அவங்க என்னை ஏத்துக்கல... அடி அடி அடி...னு அடிச்சு எனக்கு உடம்பே மரத்துப்போனது. இந்த சமுதாயத்தில் திருநங்கைகளை பாலியலுக்கும், பிச்சையெடுப்பதற்கும் தான் என பார்க்கிறார்கள். இதுக்கெல்லாம் காரணம் பெத்தவங்க மட்டும்தான். வேறு யாருமே இல்ல...! மாறுங்க மாறுங்கனு... சொல்றாங்க... முதலில் நீங்க மாறுங்க... நாங்கலெல்லாம் எப்பவோ மாறிட்டோம். பெத்தவங்க பொறுப்பில்ல... மத்தவங்க பொறுப்பில்ல... உலகத்துல...’’ என நமீதா மாரிமுத்து கண்ணீர் தளும்பி கதறி அழ.. ஒட்டுமொத்த போட்டியாளர்களும் அவருக்கு இணையாக கதறி அழுது அவரை கட்டியணைத்த தேற்றும் ப்ரமோ டச்சிங் ரகமாக இருந்தது.