Bigg Boss Tamil : 2 ஆவது போட்டியாளரும் அவுட்..முதல் வார எலிமினேஷனில் வெளியேறியது யார் தெரியுமா ?
Bigg Boss Tamil 9 : பிக்பாஸ் தமிழின் 9 ஆவது சீசனில் முதல் வார எலிமினேஷனில் இரண்டாவது போட்டியாளராக இயக்குநர் பிரவீன் காந்தி வெளியேறியுள்ளார்

பிக்பாஸ் தமிழின் 9 ஆவது சீசன் முதல் வாரத்திலேயே பல்வேறு சர்ச்சைகளுடன் பரபரப்பாக தொடங்கியுள்ளது. முதல் வார எவிக்ஷனுக்கு முன்பே நந்திதி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில் முதல் வார எமிக்ஷனின் இயக்குநர் பிரவீன் காந்தி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்
பிரவின் காந்தி வெளியேறினார்

பிக்பாஸ் வார இறுதி எபிசோட்டுக்கான படப்பிடிப்பு இன்று நடைபெற்று வருகிறது. முதல் வார எவிக்ஷனில் யார் வெளியேறப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது. இப்படியான நிலையில் நந்தினி பிக்பாஸ் வீட்டில் இருந்து அவராகவே வெளியேறினார். முந்தைய சீசன்களில் முதல் வாரம் என்பதால் எவிக்ஷன் தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது நந்தினியும் வெளியேறி இருப்பதால் முதல் வாரம் எவிக்ஷன் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த சீசன் எதிர்பார்க்காத அடுத்தடுத்து புதிய திருப்பங்களை எடுத்து வருகிறது. அந்த வகையில் நந்தினியைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியாளராக இயக்குநர் பிரவீன் காந்தி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். எலிமினேஷன் பட்டியலில் வாட்டர்மெலஸ் ஸ்டார் திவாகர் உள்ளிட்ட சிலர் மற்ற போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டார்கள். அதிக நபரால் நாமினேட் செய்யப்பட்டதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து பிரவீன் காந்தி வெளியேற்றபட்டார்.
ரட்சகன் , ஜோடி , ஸ்டார் போன்ற ஹிட் படங்களை இயக்கிய பிரவின் காந்தி பிக்பாஸ் போட்டியில் உற்சாகமாக கலந்துகொண்டாலும் அடுத்த நாட்களில் சோர்ந்தே காணப்பட்டார். கவனமீர்ப்பதற்காக மற்ற போட்டியாளர்களின் வேண்டுமென்றே சர்ச்சைகளில் ஈடுபட்டும் பிரச்சனைகளை உருவாக்கி வந்தபோது பிரவீன் காந்தி சர்ச்சைகளில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இதனால் அவர் ஆக்டிவாக இருப்பதில்லை என்றும் மற்ற போட்டியாளர்களுடன் கலந்து செயல்படவில்லை என்று குறை கூறினார்கள். தன்னுடைய திரை வாழ்க்கைப் பற்றி பிரவீன் காந்தி பிக்பாஸ் வீட்டில் பேசியது பலரது கவனத்தை ஈர்த்தது. தான் மூன்று ஹிட் படங்கள் கொடுத்து நடிகனாக நடிக்க ஆசைப்பட்டதே தனது கரியரில் பின்னடைவாக அமைந்ததாக அவர் கூறியதை பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் ஆர்வத்துடன் கேட்டனர். இப்படியான நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக எவிக்ஷன் முறையில் அவர் வெளியேறியுள்ளார்.
இந்த எபிசோட் நாளை ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கலாம்
மீதமுள்ள போட்டியாளர்கள்
பிக்பாஸ் தமிழின் 9 ஆவது சீசன் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் , அரோரா சின்க்ளேர் , எஃப்.ஜே , வி.ஜே பார்வதி , துஷார் , கனி, சபரி , பிரவீன் காந்தி , கெமி , ஆதிரை , ரம்யா ஜோ , வியானா , வினோத் , சுபிக்ஷா , அப்சரா சிஜே , நந்தினி , கலையரசன் , விக்ரம் , கமருதீன் ஆகிய 20 போட்டியாளர்கள் இந்த ஆண்டு போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளார்கள். தற்போது முதல் வாரத்தில் நந்தினி மற்றும் பிரவீன் காந்தி ஆகிய இருவர் வெளியேறியுள்ள நிலையில் மீதமுள்ள 18 போட்டியாளர்கள் அடுத்த வாரத்திற்கு நுழைய இருக்கிறார்கள்.





















