BiggBoss Julie: ரோபோ சங்கர் குடும்பத்துடன் பிக் பாஸ் ஜூலி... என்னவா இருக்கும்?
ரோபோ ஷங்கர் மனைவி மகளுடன் வார இறுதி நாட்களை கொண்டாடிய பிக் பாஸ் ஜூலி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமான பல முகங்களில் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமான ஒரு முகம் பிக் பாஸ் புகழ் ஜூலி. பிக் பாஸ் வீட்டில் பல சர்ச்சைகளை சந்தித்து அதன் மூலம் மிகவும் பப்ளிசிட்டி ஆன ஜூலை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு பல ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஜூலி ஒரு யூடியூப் சேனல் ஒன்றையும் ஆரம்பித்து தற்போது மிகவும் பிரபலமாகி இருக்கிறார்.
பிகில் பாண்டியம்மா :
விஜய் டிவியின் ஸ்டார்களில் ஒருவர் மற்றும் இன்று வெளியாகும் பெரும்பாலான தமிழ் திரைப்படங்களில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் ரோபோ ஷங்கர். அவரின் மகள் இந்திரஜா நம் அனைவருக்கும் பிகில் பாண்டியம்மாவாக மிகவும் பரிச்சயமானவர். அந்த கதாபத்திரம் மூலம் மிகவும் பிரபலமானவர் இந்திரஜா. அதனை தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் இவரும் படு பிஸி. அவ்வப்போது புகைப்படங்களை ஷேர் செய்வது வழக்கம். தாய் பிரியங்காவை போலவே நடனத்திலும் தேர்ந்தவரான இந்திரஜா சமீபத்தில் பரதநாட்டியம் மற்றும் வீணை வாசிக்கும் போட்டோஸ் மற்றும் வீடியோஸ் ஷேர் செய்திருந்தார். சுமார் 15 ஆண்டுகளாக இசை மற்றும் பரதநாட்டியம் பயின்று வரும் இந்திரஜா அதில் விருதும் பெற்றுள்ளார்.
View this post on Instagram
ஜூலியின் வீக் எண்ட் வைப்ஸ் :
இந்த வார இறுதி நாட்களில் இந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக நடிகை ஜூலி, ரோபோ ஷங்கர் வீட்டிற்கு சென்று என்ஜாய் செய்துள்ளார். இந்திரஜா மற்றும் அவரின் அம்மா பிரியங்காவின் இருவருடனும் இந்த வார இறுதி நாட்களை சந்தோஷமாக கழித்துள்ளார். அவர்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஜூலி. வீக் எண்ட் வைப்ஸ் வித் ஃபேமிலி. லவ் யூ போத் ஆல்வேஸ் என போஸ்ட் செய்துள்ளார். இதற்கு ஜூலியின் ரசிகர்கள் கமெண்ட்கள் மற்றும் லைக்ஸ் மூலம் தங்களது அன்பை தெ ரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

