Bigg Boss 9 Tamil: செருப்பு பிஞ்சிரும்.. வசமாக சிக்கிய அரோரா.. கழுவி ஊற்றிய பிக்பாஸ்!
பிக்பாஸில் தற்போது பேமிலி டாஸ்க் நடைபெறுகிறது. அதாவது ஒவ்வொரு போட்டியாளரின் குடும்பத்தினரும் வருகை தரும் நிகழ்வாகும். இதில் அரோராவுக்கு மட்டும் அவரது நண்பர்கள் வந்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவரான அரோரா பணப்பெட்டியுடன் வெளியேற திட்டமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பிக்பாஸூக்கு தனி இடம் உண்டு. 9வது சீசனாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். சமூகத்தில் பல்துறை சார்ந்து இயங்கும் பிரபலங்களை போட்டியாளர்களாக பங்கேற்க வைத்து அவர்களுக்கு பலவிதமான டாஸ்குகள் கொடுத்து அதில் ஒருவரை வெற்றியாளராக தேர்வு செய்யும் இந்நிகழ்ச்சி 100 நாட்களை அடிப்படையாக கொண்டது.
பிக்பாஸ் 9வது சீசனில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், அரோரா, விக்கல்ஸ் விக்ரம், விஜே பார்வதி, இயக்குநர் பிரவீன் காந்தி, கனி திரு, பிரவீன் குமார், சுபிக்ஷா, சபரி நாதன், ஆதிரை, துஷார், வியானா, கானா வினோத், திவ்யா கணேசன், அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, கெமி, ரம்யா ஜோ, அப்சரா, நந்தினி, கம்ரூதின், கலையரன் என பலரும் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சி 2025, அக்டோபர் 5ம் தேதி தொடங்கியது.
கடைசிக் கட்டத்தில் திருப்பம்
பிக்பாஸ் போட்டியாளர்கள் வாரம்தோறும் நாமினேட் செய்யப்பட்டு பின் அவர்களில் ஒருவர் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்படுவார்கள். அந்த வகையில் இந்நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து சென்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது பேமிலி டாஸ்க் நடைபெறுகிறது. அதாவது ஒவ்வொரு போட்டியாளரின் குடும்பத்தினரும் வருகை தரும் நிகழ்வாகும்.
Cash potti ah thookitu escape aahidava!!#BiggBossTamilSeason9
— Christopher Kanagaraj (@Chrissuccess) December 25, 2025
pic.twitter.com/jHpEQVczzP
இதில் அரோராவுக்கு மட்டும் அவரது நண்பர்கள் வந்தனர். குடும்பத்தினர் விலகி இருக்கும் நிலையில் அரோரா அதுதொடர்பாக தனது கவலைகளை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் அரோராவின் நண்பர்களான முந்தைய பிக்பாஸ் போட்டியாளரான ரியா உள்ளே வந்தார். அப்போது அவரின் காதில் பணப்பெட்டி டாஸ்க் வந்தால் அதை எடுத்துக் கொண்டு ஓடிடட்டுமா என அரோரா கேட்டார்.
அதற்கு ரியா, ‘செருப்பு பிஞ்சிடும்’ என கண்டித்தார். இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் குரல் ஒலித்தது. அதில், ‘எனக்கு கேட்டுடுச்சு.. அடுத்த முறை பெட்டரா முயற்சி பண்ணுங்க’ என நக்கலாக பதிலளித்தார். இதனால் சக போட்டியாளர்கள் என்ன நடந்தது என தெரியாமல் குழம்பி போயினர்.
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்படும். அதன்படி கார்டன் ஏரியாவில் பணப்பெட்டி வைக்கப்பட்டு அதன் மதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும். இதனை ஏதேனும் ஒரு போட்டியாளர் எடுத்துக் கொண்டு வெளியேறி விடலாம் என்ற விதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





















