மேலும் அறிய

நான் அப்படித்தான் பேசுவேன்.. கொந்தளித்த பாவ்னி .. ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன#WeStandWithPavni.. என்ன பிரச்சனை?

பிக்பாஸ் பாவனிக்கு ஆதரவாக ட்விட்டரில் #WeStandWithPavni என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 லூட்டி, நையாண்டி, சண்டை, சச்சரவு என விறுவிறுப்பாக 67 நாளை நிறைவு செய்திருக்கிறது. 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 7 பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது இமான் அண்ணாச்சி, சிபி, ராஜு,  வருண், நிரூப், அமீர், சஞ்சீவ், அபினய், பாவ்னி, பிரியங்கா, அக்‌ஷரா, தாமரை உள்ளிட்டோர் விளையாடி வருகின்றனர்.

இந்த 12 பேரில் பாவ்னியும், அபினயும் ஆரம்பத்தில் இருந்தே நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். ஒருகட்டத்தில் நட்பில் சந்தேகமடைந்த பாவ்னி, நேரடியாக நீங்கள் என்னை காதலிக்கிறீர்களா அபினயிடம் கேட்க, அதெல்லாம் ஒன்றுமில்லை நமக்குள் இருப்பது நல்ல நட்பு மட்டுமே என்று கூற, அவர்களின் நட்பு தற்போது வரை தொடர்ந்து வருகிறது. 

இந்த நிலையில் அண்மையில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு ட்ரூத் அண்ட் டேர் போட்டி நடத்தப்பட்டது. அப்போது ராஜூ அபினயிடன் நீ பாவ்னியை காதலிக்கிறாயா என்று கேட்க, அதிர்ச்சியில் உறைந்தது பிக்பாஸ் வீடு.  இந்த நிலையில், அபினய்க்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது என்பதை தெரிந்தே எப்படி இந்தக் கேள்வியை கேட்பாய் என பிரியங்கா ராஜூவிடம் கேட்க, நான் யதார்த்தமாக கேட்டேன், ஆனால் நான் கேட்டிருக்க கூடாது என்று அனைவரின் முன்னிலையிலும் மன்னிப்புக் கேட்டார் ராஜூ. 

இந்த நிலையில்தான்  வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அமீர், பாவ்னியுடன் நட்பாக பழகி வந்தார். அந்த வகையில் இருவரும் பேசிக்கொண்டிருந்த போது இருவரும் ஒருவரையொருவர் அடித்து விளையாடினர். இதைப் பார்த்த அபினய் கடுப்பானார். இமான் அண்ணாச்சியும் அமீரை அழைத்து நட்பாக பழகினாலும், அடித்து விளையாடுவது சரியில்லை என கூறினார். இதனைத் தொடர்ந்து அமீர் நான் பாவ்னியிடம் பேசுவது அபினய்க்கு பிடிக்கவில்லை என வெளிப்படையாக கூறினார். 

இந்த நிலையில் இந்தப் பிரச்னை இன்று பெரிய விவகாரமாக வெடிக்க இருப்பது தற்போது வெளியாகியுள்ள  ப்ரோமோ மூலம் தெரிய வந்துள்ளது. அதில்,  நான் அபினய் கூட தனியாக உட்கார்ந்து எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பேசுவேன், அது எங்களது விருப்பம் உனக்கு இதை பற்றி பேச உரிமை இல்லை நீ ஏன் பேசுகிறாய் நீ யார்? என ராஜூவை பார்த்து கேட்கிறார் பாவ்னி 

அப்போது குறுக்கிடும் சிபி, இது நட்பு இல்லை காதல் இல்லை என்றால் வேறு என்ன? என்று கேட்கிறார். அதற்கு பாவ்னி இது தனிப்பட்ட பிரச்சனை என கூற, நான் அப்படி தான் பேசுவேன் என பாவ்னி கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே வெளியான ப்ரோமோக்களில் பிரியங்கா தாமரை இடையே மோதல் தொடர்பான காட்சிகள் வெளியான நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோ, நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த நிலையில்,  பாவ்னிக்கு ஆதரவாக நெட்டிசன்கள் #WeStandWithPavni என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டிரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
ADMK BJP Alliance : பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
Embed widget