RajuVootlaParty: ராஜூ வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மா குடும்பத்தினர்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜூ வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் இந்த வாரம் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிப்பவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழ் தொலைக்காட்சிகளில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எப்போதும் மற்ற சேனல்களின் நிகழ்ச்சிகளில் இருந்து வித்தியாசமாகவே இருக்கும். சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என வார நாட்களிலும் சரி, வார இறுதி நாட்களிலும் சரி பார்வையாளர்களை தங்கள் பக்கம் கட்டிப் போட்டு விடுகின்றனர்.
அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்தவுடன் “ராஜூ வூட்ல பார்ட்டி” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதனை பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமான ராஜூ தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இதில் இமான் அண்ணாச்சி, மதுரை முத்து, பிரியங்கா, தீபா, ஷிவா அரவிந்த் என பலரும் உள்ளனர். ராஜூ வீட்டு பார்ட்டிக்கு வரும் பிரபலங்களிடம் கேள்விகள், டாஸ்குகள் என இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாளை ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
இன்னிக்கு வைஜயந்தி IPS செம்ம Atrocity பண்ண போறாங்க.. 🤣
— Vijay Television (@vijaytelevision) September 3, 2022
ராஜு வூட்ல பார்ட்டி - நாளை இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #RajuVootlaParty #VIjayTelevision pic.twitter.com/CSHq3Lnfu7
இந்த வாரம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பாரதிகண்ணம்மா குடும்பத்தினரான அருண் பிரசாத், வினுஷா தேவி, ஃபரீனா உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டுள்ளனர்.
View this post on Instagram
View this post on Instagram
அதில் நகைச்சுவை நடிகரான ராமர் லேடி போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். வைஜயந்தி ஐபிஎஸ் என்ற கதாபாத்திரத்தில் வந்து அனைவரையும் குலுங்க குலுங்க சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.