மேலும் அறிய

Bhagyalakshmi Serial: டார்ச்சர் ராதிகா...கோபி செய்த செயலால் அதிர்ச்சியடைந்த பாக்யா குடும்பத்தினர்..!

Bhagyalakshmi Serial Written Update Today (07.11.2022):பாக்யா வீட்டுக்கு செல்லும் கோபி அங்கு கிச்சனில் ரேஷன் கார்டை தேடி இருக்கும் பொருட்களை கலைத்துப் போடுகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகாவால் மீண்டும் பாக்கியா வீட்டுக்கு வரும் காட்சிகள் இடம் பெறுகிறது. 

எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி

விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.

இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக  எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.

இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர் நடக்கும் காட்சிகள் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.

டார்ச்சர் ராதிகா 

ரேஷன் கார்டு கேட்டு பாக்யா வீட்டுக்கு போன கோபி, ஏய் பாக்யா போய் அதை எடுத்துட்டு வான்னு சொல்ல, உடனே பாக்யா இந்த ஏய், ஓய் எல்லாம் சொல்ல நான் ஒன்னும் உங்க பொண்டாட்டி இல்ல புரியுதா. மரியாதை ரொம்ப முக்கியம் என தெரிவிக்கிறார். இதனால் கோபி அதிர்ச்சியடைகிறார். ஆனால் ரேஷன் கார்டு எனக்கு கண்டிப்பாக வேணும் என கோபி அடம்பிடிக்க அதெல்லாம் தர முடியாது முடிஞ்சதை பண்ணிக்கோ என  ராமமூர்த்தி தெரிவிக்கிறார். 

இதனால் அங்கிருந்து வெளியே போகும் கோபி ராதிகா என்ன சொல்ல போறாளோ என புலம்பி கொண்டே வீட்டுக்கு சென்று நடந்ததை சொல்கிறார். எதுவுமே உங்களால பண்ண முடியாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். உங்க கோபமெல்லாம் என்கிட்ட மட்டுமே காட்ட தெரியும் என சகட்டுமேனிக்கு ராதிகா பேச, அந்த வீட்டுல இருக்குறவங்க உங்களை வெளியே அனுப்புனாங்களே, உங்களால அந்த ரேஷன் கார்டை வாங்க முடியாதா என கோபியை டார்ச்சர் செய்கிறார். 

இதனால் நொந்துப்போன கோபி நீ ரொம்ப மாறிட்ட என சொல்ல, நீங்களும் தான் என பதிலுக்கு ராதிகா சொல்கிறார். கல்யாணத்துக்கு முன்னாடி அதை பண்றேன், இதை பண்றேன்னு சொல்லிட்டு இப்ப ஒரு ரேஷன் கார்டு கூட வாங்க முடியல என சொல்ல இப்ப என்ன ரேஷன் கார்டு தானே வேணும். இப்பவே போய் வாங்கிட்டு வர்றேன்னு சொல்கிறார். 

கோபியின் பரிதாப நிலைமை

நேராக பாக்யா வீட்டுக்கு செல்லும் கோபி அங்கு கிச்சனில் ரேஷன் கார்டை தேடி இருக்கும் பொருட்களை கலைத்துப் போடுகிறார். இதனால் பாக்யா டென்ஷன் ஆக, வீட்டில் உள்ள மற்றவர்களும் எரிச்சலடைகிறார்கள். ஆனால் நான் ரேஷன் கார்டு இருந்தால் தான் போவேன்னு சொல்ல, செழியன் -ஜெனி பேச்சில் இருந்து கார்டு இருக்கும் இடத்தை கோபி கண்டுபிடிக்கிறார். பின்னர் ஒரு ஜெராக்ஸ் எடுத்துட்டு பேரை தூக்கிட்டு கொடுக்கிறேன் என தெரிவித்து விட்டு ராதிகாவிடம் சென்று கார்டை நீட்டி இப்போ உனக்கு சந்தோஷமா என கோபப்படுகிறார். இந்த முறை கூலாக பேசும் ராதிகா நான் போய் உங்களுக்கு பிளாக் காஃபி எடுத்துட்டு வாரேன்னு சொல்லிவிட்டு செல்கிறார். 

எழிலுக்கு காத்திருந்த அதிர்ச்சி 

வீட்டுக்கு வரும் எழிலிடம் ஈஸ்வரி தயாரிப்பாளர் மகள் வர்ஷினி வந்ததை சொல்கிறார். பேசாமல் அவளை இவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிரலாம் என சொல்ல எழில் அதிர்ச்சியடைகிறார். இப்ப எதுக்கு கல்யாணத்துக்கு அவசரம் என பாக்யா நிலைமையை சமாளிக்க நான் சும்மாதான் கேட்டேன். செழியன் கல்யாணம் தான் நினைச்சப்படி நடக்கல. ஆனால் எழில் கல்யாணம் நல்லா பெருசா நடக்கணும் என சொல்லிவிட்டு ஈஸ்வரி செல்கிறார். இதனையடுத்து எழில் பாக்யாவிடம் இதற்கு அப்புறம் என்ன பண்றது என பேசுவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
Gold Silver Rates Dec.22nd: ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
Gold Silver Rates Dec.22nd: ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
Mahindra Scorpio N: புத்தாண்டில் மஹிந்த்ராவின் முதல் சம்பவம் - ஸ்கார்ப்பியோ அப்க்ரேட், என்ன இருக்கு? எப்படி வரும்?
Mahindra Scorpio N: புத்தாண்டில் மஹிந்த்ராவின் முதல் சம்பவம் - ஸ்கார்ப்பியோ அப்க்ரேட், என்ன இருக்கு? எப்படி வரும்?
தானத்தில் தழைத்தோங்கும் தமிழ்நாடு.. 5 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானத்தில் மாஸ் காட்டிய தமிழகம்!
தானத்தில் தழைத்தோங்கும் தமிழ்நாடு.. 5 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானத்தில் மாஸ் காட்டிய தமிழகம்!
Trump Epstein Files: எப்ஸ்டீன் கோப்புகள்; மீண்டும் தோன்றிய ட்ரம்ப்பின் புகைப்படங்கள்; நீதித்துறை அளித்த விளக்கம் என்ன.?
எப்ஸ்டீன் கோப்புகள்; மீண்டும் தோன்றிய ட்ரம்ப்பின் புகைப்படங்கள்; நீதித்துறை அளித்த விளக்கம் என்ன.?
TVK VIJAY: 70 தொகுதிகளில் தவெக டெபாசிட் இழக்கும்.!! விஜய்க்கு ஷாக் கொடுக்கும் இந்து மக்கள் கட்சி
70 தொகுதிகளில் தவெக டெபாசிட் இழக்கும்.!! விஜய்க்கு ஷாக் கொடுக்கும் இந்து மக்கள் கட்சி
Embed widget