Baffoon Movie: யு/ஏ சான்றிதழ் பெற்ற "பபூன்" திரைப்படம்... தமிழகமெங்கும் செப்டம்பர் 23 ரிலீஸ்
கார்த்திக் சூப்ப்ராஜ் தயாரிப்பில் வைபவ் நடித்துள்ள திரைப்படம் "பபூன்". இப்படத்திற்கு தற்போது யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் வைபவ் நடித்துள்ள திரைப்படம் "பபூன்". இப்படத்திற்கு தற்போது யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் ஒரு அதிரடி, ஆக்சன் மற்றும் திரில்லர் கலந்த கலவையான திரைப்படம் "பபூன்". இவர் பீட்சா, ஜிகர்தண்டா போன்ற படங்களில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஸ்டோன் பெஞ்ச்’ நிறுவனத்தில் சார்பில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியாக தயாராகவுள்ள இப்படத்தில் நடிகர் வைபவ் மற்றும் "நட்பே துணை" படத்தின் மூலம் பிரபலமான நடிகை அனகா நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் தினேஷ் புருஷோத்தம்மன்.
The Date is Nearing!⏰
— Sakthi Film Factory (@SakthiFilmFctry) September 19, 2022
4 Days for #Buffoon Release
The movie hits screens on September 23rd, 2022 across Tamilnadu. #Buffoon trailer 👉 https://t.co/KDq01R4Yb9 pic.twitter.com/4F5Jpdrscc
யு/ஏ சான்றிதழ் பெற்ற "பபூன்" திரைப்படம் :
நடிகர் வைபவ் "காட்டேரி" படத்தை தொடர்ந்து "பபூன்" திரைப்படத்தில் ஒரு மேடை நாடக கலைஞனாக நடித்துள்ளார். இப்படம் அதிரடி, சஸ்பென்ஸ், திரில்லர் மற்றும் ஆக்சன் கலந்த ஒரு முழு நீள எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் அசோக் வீரப்பன். இந்த திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ப்ரோமோ அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. செப்டம்பர் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாக தயாராகவுள்ள இந்த திரைப்படம் சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது தணிக்கை குழு "பபூன்" படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது, இந்த அறிவிப்பினை படக்குழுவினர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
செப்டம்பர் 23ம் தேதி வெளியாகவிருக்கும் பபூன் திரைப்படத்தின் நீளம் 118 நிமிடங்கள் 48 நொடிகள் என அந்த சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தின் நீளம் மிகவும் குறைவு என்றாலும் மிகவும் விறுவிறுப்பாக த்ரில்லிங்காக இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.
#Buffoon - Censor Certificate( U/A)
— Rajasekar (@sekartweets) September 19, 2022
Runtime : 118 Mins 48 Sec pic.twitter.com/oeiYFcoVyx
சந்தோஷ் நாராயணின் இசை ஒரு பிளஸ் :
இப்படத்தில் வைபவ் தனது வாழ்கை தரத்தை முன்னேற்றி கொள்வதற்காக வெளிநாடு செல்ல முயற்சிக்கிறார் ஆனால் எதிர்பாராத சில காரணங்கள் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அதில் இருந்து எப்படி மீண்டு வெளிய வருகிறார் என்பதை மிகவும் சஸ்பென்ஸ் கலந்து படமாக்கியுள்ளார் இயக்குனர். சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் பிரமாதம். பாடம் வெளியாக இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருந்தனர் வெங்கட் பிரபு, கௌதம் மேனன், லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார்.