Baakiyalakshmi Serial:”ராதிகாவை கல்யாணம் செய்ய என்னென்ன செய்ய வேண்டி இருக்கு” ..தவிக்கும் கோபி
தயாரிப்பாளருடனான மனஸ்தாபத்தால் வாய்ப்பை இழந்து ஆபீஸை காலி செய்து வெளியேறும் எழில், கடைசியாக சொல்லிவிட்டு வரலாம் என அவரை சந்திக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் இனியா ராதிகா வீட்டுக்கு சென்றதை வீட்டில் சொல்லும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது.
ரசிகர்களை கவரும் பாக்கியலட்சுமி
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறியது, . ராதிகா கோபியை திருமணம் செய்ய சம்மதித்த காட்சிகள் இடம் பெற்றது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
இனியாவிடம் மறைமுகமாக சொல்லும் கோபி
ராதிகா வீட்டிலிருந்து வெளியேறிய கோபி மற்றும் இனியா காரில் தங்களது வீட்டுக்கு வருகின்றனர். அப்போது இனியாவிடம் ராதிகாவை திருமணம் செய்து கொள்ளப் போவதை மறைமுகமாக கோபி தெரிவிக்கிறார். ராதிகா ரொம்ப நல்லவ. அவ உனக்கு நல்ல ஃப்ரண்ட் மாதிரி இருப்பா என என்னெல்லாமோ சொல்ல, இனியாவோ ஏன் இதெல்லாம் என்கிட்ட சொல்றீங்க. நான் அவங்கள பத்தி எதுக்கு யோசிக்கப்போறேன் என கேட்கிறார். நான் ராதிகாவை கல்யாணம் பண்ணிக்கப் போறதை எப்படி சொல்லன்னு எனக்கு தெரியல. அதான் இப்படி பேசுறேன் என தனக்குத்தானே சொல்லிக்கொண்டு தவிக்கிறார்.
மேலும் என்ன நடந்தாலும் நான் உன்ன விட்டு போகமாட்டேன் . இப்போ என்னுடைய வாழ்க்கையில முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துருக்கேன் என சொல்லி கல்யாணத்துக்காக வாங்கிய டிரஸ்ஸை இனியாவிடம் கோபி கொடுக்கிறார். அதைப் பார்த்து இனியா சந்தோசப்படுகிறார். பின்னர் கோபியுடன் இனியா வீட்டுக்கு வந்து இறங்கியதை பாக்யா பார்க்கிறார். அவரை பார்க்கும் கோபி என்ன ரொம்ப சந்தோசமா இருக்க போல..சீக்கிரமே உனக்கு அதிர்ச்சி தர மாதிரி ஒரு செய்தி வரும் பாரு என மனதுக்குள் நினைத்துக் கொண்டு அங்கிருந்து செல்கிறார்.
இழந்த வாய்ப்பை பெற்ற எழில்
தயாரிப்பாளருடனான மனஸ்தாபத்தால் வாய்ப்பை இழந்து ஆபீஸை காலி செய்து வெளியேறும் எழில், கடைசியாக சொல்லிவிட்டு வரலாம் என அவரை சந்திக்கிறார். அப்போது ஷூட்டிங் எப்போ போகப் போறீங்க என தயாரிப்பாளர் தான் இப்படத்தை எடுக்கப் போவதாக கூறி இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார். மேலும் அதற்கு காரணம் தனது மகள் வர்ஷினி எனவும் கூற இருவரும் மகிழ்ச்சியடைகின்றனர். ஏற்கனவே எழில் மீது வர்ஷினிக்கு ஒரு ஈர்ப்பு உள்ள நிலையில், தனது கார் டிரைவரை வர வேண்டாம் சொல்லிவிட்டு தன்னை பைக்கில் அழைத்து செல்லுமாறு கேட்க, எழிலும் சம்மதிக்கிறார். இதற்கிடையில் எழிலுக்கு அம்ரிதா போன் செய்யும் போது அங்கிருக்கும் வர்ஷினி இருவருக்குமிடையேயான காதல் பற்றி தெரிந்து கொள்கிறார்.
இனியாவை திட்டிய ஈஸ்வரி
செழியனிடம் ஈஸ்வரி கோபி போன் செய்தது பற்றி விசாரிக்கிறார். அந்நேரம் அங்கு வரும் இனியாவிடம் என்ன பண்ணிக்கிட்டு இருக்க என கேட்கிறார். தான் ஹோம் ஒர்க் செய்வதாக சொல்லும் இனியாவை மறித்த ஜெனி, அவள் பொய் சொல்றா. ஏதோ புது டிரஸ் போட்டு பார்த்துட்டு இருக்கா என போட்டுக் கொடுக்கிறார். உடனே ஏது அது? என ஈஸ்வரி விசாரிக்க அப்பா வாங்கிக் கொடுத்ததாக இனியா கூறுகிறாள். கோபி வேற எதுவும் சொன்னானா என ஈஸ்வரி கேட்க, ராதிகா வீட்டுக்கு கூட்டிப் போனதை இனியா தெரிவிக்க குடும்பத்தினர் அதிர்ச்சியடைகின்றனர். இந்த காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.