Baakiyalakshmi Serial: கோபி-ராதிகா கல்யாணத்துக்கு சமைக்கப் போகும் பாக்யா... சவால் விட்ட ஈஸ்வரி..!
கல்யாணத்துக்கு ஷாப்பிங் செய்துவிட்டு கோபி, ராதிகா, மயூ, ராதிகா அண்ணன் சந்துரு, அம்மா என அனைவரும் காரில் திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர்.
பாக்யலட்சுமி சீரியலில் கோபி -ராதிகா கல்யாணத்துக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வரும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறியது, . ராதிகா கோபியை திருமணம் செய்ய சம்மதித்த காட்சிகள் இடம் பெற்றது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
பாக்யாவுக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி
கல்யாணத்துக்கு ஷாப்பிங் செய்துவிட்டு கோபி, ராதிகா, மயூ, ராதிகா அண்ணன் சந்துரு, அம்மா என அனைவரும் காரில் திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது கோபி தான் இனியாவை மிஸ் பண்ணுவதாக கூறுகிறார். ஆனால் ராதிகா அவருக்கும் சேர்த்து ட்ரெஸ் வாங்கியிருந்தார். அதை குறிப்பிட்டு கோபிக்கு ஆறுதல் சொல்கிறார். இதனையடுத்து திருமண மண்டபத்தில் பாக்யாவுக்கு சமைக்க ஆர்டர் வருகிறது.
மண்டப ஓனர் கூப்பிட்டு விஷயத்தை சொல்லி இதுகுறித்த விவரங்களை தெரிவிக்கிறார். பாக்யாவின் மூத்த மருமகள் ஜெனி அந்த நம்பருக்கு போன் செய்கிறார். அது சந்துருவின் போன் நம்பர். பாக்யா சமைக்க ஆர்டர் எடுத்தது கோபி-ராதிகா கல்யாணத்துக்கு தான். ஆனால் தான் வெளியில் இருப்பதால் வீட்டுக்கு சென்று கூப்பிடுவதாக தெரிவிக்கிறார். இதன்பின்னர் வீட்டில் ராதிகா- கோபி இருவரும் பேசிக் கொள்கின்றனர். அப்போது அம்மா ஈஸ்வரியை கல்யாணத்துக்கு கூப்பிட போவதாக கூற, முதலில் தயங்கும் ராதிகா பின்னர் சம்மதிக்கிறார்.
கல்யாணம் செய்ய கோபி எடுத்த அதிரடி முடிவு
உடனே ஈஸ்வரிக்கு போன் செய்து கோவிலுக்கு வருமாறும்,முக்கியமான விஷயம் பேச வேண்டும் என தெரிவிக்கிறார். இதற்கிடையில் பாக்யா, ஜெனி இருவரையும் சந்துரு நேரில் சந்தித்து, உங்கள் வீடுகளில் ஒருவருக்கு கல்யாணம் என்ற எண்ணத்தில் சமைக்க வேண்டும் என தெரிவிக்க, ராதிகா தான் மணப்பெண் என தெரியாமல் என் தங்கச்சி மாதிரி..நல்லா பண்ணிடலாம் என தெரிவிக்கிறார். சந்துருவுக்கும் பாக்யா தான் கோபியின் முன்னாள் மனைவி என தெரியாது.
வீட்டில் இருக்கும் ஈஸ்வரி ஏதோ யோசனையில் இருக்கும் நிலையில் அவரிடம் மூர்த்தி, ஜெனி இருவரும் கோவிலுக்கு போகாமல் என்ன செய்கிறாய் என கேட்கிறார்கள் . கோபி வர சொன்னதை நினைத்து கோவிலுக்கு செல்ல புறப்படுகிறார். செல்வியும் தானும் கோவிலுக்கு வருவதாக தெரிவிக்க அவளை திட்டி விட்டு ஈஸ்வரி பதட்டத்துடன் கோவிலுக்கு செல்வதை பார்த்து மூர்த்தி சந்தேக்கிப்பதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.