Baakiyalakshmi Serial: இனி பாக்யாவிற்கு பாக்கியம் இல்லை... பழிவாங்க புறப்பட்ட கோபி!
விவாகரத்து வழங்குவது தொடர்பாக கோபிக்கும், பாக்யாவுக்கும் இடையே நடைபெறும் சம்பவங்கள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்து வழங்குவது தொடர்பாக கோபிக்கும், பாக்யாவுக்கும் இடையே நடைபெறும் சம்பவங்கள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரம் முழுக்க வீட்டை விட்டு வெளியேறிய பாக்யாவை குடும்பத்தினர் ஒவ்வொருவரும் வந்து சமாதானப்படுத்துவது, குழந்தைகளுக்காக பாக்யா மீண்டும் வீட்டுக்கு வந்தது போன்ற காட்சிகள் இடம் பெற்றது.
நேற்றைய எபிசோடில் கோபிக்கு விவாகரத்து வழங்க பாக்யா அவரை கோர்ட்டுக்கு அழைக்கும் காட்சிகளும், பாக்யாவை குடும்ப உறுப்பினர்கள் தடுக்கும் காட்சிகளும் ஒளிபரப்பானது. பாக்யா கோர்ட்டுக்கு சென்றால் இனிமேல் பேசப்போவதில்லை என செழியனும், இனியாவும் தெரிவிக்க ஈஸ்வரி பாக்யாவிடம் என்னை மீறி நீ சென்றால் நான் உனக்கு சப்போர்ட் செய்ய மாட்டேன் என தெரிவிக்கிறார். ஆனால் என்ன மன்னிச்சிருங்க..இதைவிட்டா எனக்கு வேற வழி தெரியல என ஈஸ்வரி, மூர்த்தி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டு வீட்டை விட்டு வெளியேறி இளைய மகன் எழிலுடன் கோர்ட்டுக்கு புறப்படுகிறார்.
பாக்யாவின் செயலால் கடுப்பாகும் கோபி நீ என்ன எனக்கு விவாகரத்து தருவது..நானே கொடுக்குறேன் என கூறிவிட்டு கோர்ட்டுக்கு புறப்படுகிறார். அதற்குள் மூர்த்தியிடம் என்ன செய்வது என ஈஸ்வரி கேட்டதற்கு அவர் கோபி தான் முதலில் தப்பு செய்தது. அவன் தான் பாக்யாவை கூப்பிட்டு வீட்டுக்கு வர வேண்டும் என தெரிவிக்கிறார். கோர்ட்டுக்கு செல்ல கிளம்பும் கோபியை ஈஸ்வரி தடுத்து எங்கே செல்கிறாய் என கேட்கிறார். அதற்கு பாக்யா ஆசைப்பட்டு கேட்ட விவாகரத்து வழங்க என தெரிவிக்க குடும்பத்தினர் அதிர்ச்சியடைகின்றனர்.
மூர்த்தி கோபியிடம் பாக்யாவை சமாதானப்படுத்தி அழைத்து வருமாறு தெரிவிக்கிறார். அதனை மறுக்கும் கோபி விவாகரத்து வழங்கப்போவது உறுதி என கோர்ட்டுக்கு செல்வது போல இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. கோபிக்கும் - பாக்யாவுக்கும் விவாகரத்து கிடைக்குமா?..என்ன நடக்கப்போகிறதோ என வரும் நாட்களுக்கான எபிசோடுக்கு பார்வையாளர்கள் காத்திருக்கின்றனர்.