Baakiyalakshmi : ’எல்லாத்தையும் நாசமாக்கிட்டியே’ : வீட்டைவிட்டு வெளியேறிய பாக்யா.. அழுது புலம்பும் குடும்பம்..
Baakiyalakshmi Serial Promo : முதலில் கோபியின் மீது எழும் குற்றசாட்டுகளை மறுத்த கோபியின் அம்மா, பின்பு அனைத்தும் உண்மை என அறிந்து சண்டையிடுகிறார்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிவரும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் தனித்தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 போன்ற சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விதமாக பாக்யலெட்சுமி சீரியல் கதைக்களம் நகர்ந்துவருகிறது. அப்பாவியான குணத்தைக்கொண்ட பாக்யாவாக நடிகை சுதித்ராவும், ஏமாற்றும் கணவர் ரோலில் நடிகர் சுதிசும் நடித்து வருகின்றனர். கணவர் என்ன சொன்னாலும் தட்டாமல் கேட்கும் மனைவி பாக்யலட்சுமி, இதனால் மிகுந்த அவமானங்களைச் சந்திக்கிறார்.
சமீபத்தில் நடந்தது என்ன..?
லேட்டஸ்ட் எபிசோடில் கோபி விபத்தில் சிக்குகிறார். அவரை பார்க்க மருத்துவமனைக்கு செல்லும் ராதிகா தன்னை கோபியின் மனைவி என அறிமுகப்படுத்தி கொள்கிறார். அதனைப் பார்த்த பாக்யா அதிர்ச்சியாகிறார். இதனால் கோபியின் வீட்டில் ஒரு பெரிய கலவரமே நடக்கிறது. பாக்யா தனக்கு நடந்த கொடுமைகள் அனைத்தையும் கோபியை வைத்து கொண்டு போட்டு உடைக்கிறார்.
முதலில் கோபியின் மீது எழும் குற்றசாட்டுகளை மறுத்த கோபியின் அம்மா, பின்பு அனைத்தும் உண்மை என அறிந்து சண்டையிடுகிறார். தொடர்ச்சியாக ஒருவர் மாற்றி ஒருவர் கோபியின் மீது கேள்விகளை அம்புகளாய் அடுக்க பதில் சொல்லமுடியாமல் திணறுகிறார் கோபி.
இத்தனையும் ஆரம்பம் முதல் அமைதியாய் கேட்டு வந்த பாக்யா, முதல் முறையாக தனக்கான நீதியை கோபியிடம் கேட்க தொடங்குகிறார். எல்லாத்துக்கும் பொறுமை காக்கும் பாக்யா, கோபியை இந்த முறை வறுத்தெடுக்க கூனி நிற்கிறார்.
ஒரு கட்டத்தில் தான் செய்த தவறை உணர்ந்த கோபி, பாக்யாவிடம் “ பாக்யா என்னைய மன்னிச்சுரு” என்று சொல்கிறார். மீண்டும் ருத்ரகாளியான பாக்யா “இந்த ஒரு வார்த்தைய சொல்லிட்டா.. எல்லாம் சரி ஆகிருமா..? ஒவ்வொரு பொண்ணும் அவமானங்களையும், எல்லா ஏமாற்றங்களையும் சகிச்சுக்கிட்டு ஒரு இடத்தில் இருக்காங்கானா அது ஒரு நம்பிக்கைல தான். அந்த நம்பிக்கையே இப்ப ஒடஞ்சுப்போச்சு. அதுக்கு மேல என்ன இருக்கும் சொல்லுங்க” என்கிறார்.
அப்பொழுது எழில்” அம்மா நீ என்ன முடிவு எடுத்தாலும் நான் உன் கூட இருக்கேன்மா என்று பாக்யாவிற்கு துணையாக இருக்கிறார். மீண்டும் தனது பேச்சை தொடங்கிய பாக்யா இவர்தான என்ன வேணான்னு நினைச்சாரு. இப்ப ஒரு விஷயத்த நான் செய்ய போறேன் என்று கோபத்தில் பாக்யா வீட்டைவிட்டு வெளியேறினார். எழில் பின்னாடியே ஓடிச்சென்று ” அம்மா சொன்னா கேளுமா, நில்லுமா எங்கமா போற கத்திக்கொண்டே ஓட, மொத்த குடும்பமும் பாக்யா பின்னாடி செல்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்