Baakiyalakshmi Serial: கதறி அழுத பாக்யா...எந்த கவலையும் இல்லாமல் ராதிகா வீட்டுக்கு சென்ற கோபி
இதுவரை என்ன நடந்தாலும் அழாமல் கோபத்துடன் எதிர்கொண்ட பாக்யா நடந்தவற்றையெல்லாம் நினைத்து சமையலறையில் கதறி அழுகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் ராதிகா வீட்டுக்கு செல்லும் காட்சிகள் இன்று இடம் பெறவுள்ளது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த எபிசோட்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, பாக்யாவிடம் கோபி சவால் விட்டு விட்டு வீட்டிலிருந்து வெளியேறியது போன்ற காட்சிகள் இடம் பெற்றது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
எப்படி கோபி இப்படி அப்பாவியா நடிக்குறீங்க.. 😀
— Vijay Television (@vijaytelevision) August 19, 2022
பாக்கியலட்சுமி - இன்று இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VijayTelevision pic.twitter.com/mNi0P5EDrb
இதுவரை என்ன நடந்தாலும் அழாமல் கோபத்துடன் எதிர்கொண்ட பாக்யா நடந்தவற்றையெல்லாம் நினைத்து சமையலறையில் கதறி அழுகிறார். அவரை செல்வி ஆறுதல் சொல்ல, இந்த வீட்டில் எல்லாரையும் நான் நல்லாதான் பாத்துக்கிறேன். அவரை எனக்கு எவ்வளவு பிடிக்கும்ன்னு உனக்கே தெரியும்ல. நான் அவரை வீட்டை விட்டு போக சொல்லலை. இனிமே எங்களுக்கு இடையில ஒன்னுமில்லை ஆன பிறகு அவர்கூட ஒரே ரூம்ல இருக்க முடியாது தானே சொன்னேன். இந்த குடும்பத்தை நான் தான் பார்க்கணும் என பாக்யா கூறுகிறார்.
இதற்கிடையில் மூர்த்தி-ஈஸ்வரி நடந்த பிரச்சனையை பற்றி பேசுகின்றனர். தொடர்ந்து மூர்த்தி பாக்யாவுக்கு ஆதரவாக பேசுகிறார். உடனே ஈஸ்வரி கோபி இப்ப வெளியே போயிட்டான்.நேரா ராதிகா வீட்டுக்கு தானே போவான் என கூற, நான் அப்படி எல்லாம் போக விடமாட்டேன். நீ தேவை இல்லாம யோசிக்காத என மூர்த்தி சமாதானப்படுத்துகிறார். அதற்கு இந்த ஜென்மத்துல பாக்யாவும், கோபியும் தான் புருஷன் பொண்டாட்டி என கறாராக ஈஸ்வரி கூறுகிறார்.
ஆனால் அனைவரும் யூகித்தபடி கோபி நேராக ராதிகா வீட்டுக்கு செல்கிறார். அங்கு சென்றவுடன் மயூவின் உடல் நலம் குறித்து கேட்கிறார். அப்போது ராதிகாவின் அண்ணன் கோபியிடம் வீட்டுக்கு சென்றீர்களா? என கேட்க, அவரோ தான் வீட்டை விட்டு வந்து விட்டதாக கூறுகிறார். காலையில இருந்து எங்கே போறதுன்னு தெரியாம கார்ல சுத்திட்டு இருக்கேன். இப்போ எனக்குன்னு யாருமே இல்லை என கூற இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.