Baakiyalakshmi Serial: கோபிக்கு எமனாக மாறும் பாக்யா...இன்னைக்கு நடக்கப் போகும் சம்பவம் வேற லெவல்..!
பாக்யாவுக்கு சப்போர்ட் செய்யும் மூர்த்தி எல்லா பிரச்சனைக்கும் காரணம் நீதான் என கோபியை வெளியே போகச் சொல்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி வீட்டை விட்டு வெளியேற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
Baakiya on fire 🔥
— Vijay Television (@vijaytelevision) August 15, 2022
பாக்கியலட்சுமி - திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi pic.twitter.com/vHADdOjrtK
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது போன்ற காட்சிகள் இடம் பெற்றது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
பாக்யாவை வீட்டு விட்டு கோபி வெளியேற்ற முயற்சிக்கும் காட்சிகள் இன்றும் இடம் பெறவுள்ளது. பாக்யாவுக்கு சப்போர்ட் செய்யும் மூர்த்தி எல்லா பிரச்சனைக்கும் காரணம் நீதான் என கோபியை வெளியே போகச் சொல்கிறார். அதற்கு அவரோ நான் ஏன் வீட்டை விட்டு போக வேண்டும். இந்த வீட்டை என் உழைப்பில் உருவாக்கியுள்ளேன். ரூ.40 லட்சம் செலவழித்திருக்கிறேன் என புராணம் பாடுகிறார்.
நடுவில் ஜெனி பாக்யாவை சமாதானப்படுத்த முயற்சிப்பதோடு நீங்கள் இல்லாமல் என்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது என சொல்கிறார். இதைக் கேட்டு கடுப்பாகும் செழியன் பாக்யாவை விமர்சிக்க ஜெனி வாக்குவாதம் செய்கிறார். அதேசமயம் பணம் போட்டு வீட்டை வாங்கினாலும் இது இயங்க எங்க அம்மாதான் காரணம் என சொல்கிறார். உடனே ஈஸ்வரி அவரை திட்ட மூர்த்தி குறுக்கே வந்து ஈஸ்வரியை கண்டிக்கிறார். மேலும் நீ இந்த விஷயத்துல தலையிடாத என சொல்லி கோபியை வீட்டை விட்டு வெளியே தள்ள அவரை வாசலுக்கு மூர்த்தி இழுத்து வருகிறார்.
இதனால் ஆத்திரமடையும் கோபி பாக்யாவின் சூட்கேஸை எடுத்து நீ மொதல்ல வீட்டை விட்டு வெளியே போ என சொல்லி அதனை வாசலில் தூக்கி எறிகிறார். அதில் கோபி ஆடைகள் இருப்பதைப் பார்த்து குடும்பத்தினர் மிரண்டு போகின்றனர். இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்