Baakiyalakshmi Serial : கடுப்பேற்றிய கோபி.. விட்டுக்கொடுக்காத பாக்யா... இருந்தாலும் உனக்கு இவ்வளவு பாசம் ஆகாதுமா..!
கோபி பாக்யாவிடம் தனது தந்தையின் பிறந்தநாள் விழாவிற்கு சொந்தகாரர்கள் வந்தால் போதும். நண்பர்கள் யாரையும் அழைக்க வேண்டாம் என்று பாக்யாவிடம் கட்டளையிட்டு இருந்தார்.
தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மிகவும் பிரபலமானவைகளில் பாரதி கண்ணம்மாவும், பாக்கியலட்சுமியும் ஆகும். தற்போது பாரதி கண்ணம்மா தொடர் சற்று தொய்வாக சென்று கொண்டிருந்தாலும், பாக்கியலட்சுமி சீரியல் பாக்யா – கோபி – ராதிகா விவகாரத்தால் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
சமீபகாலமாக சீரியல்களில் சங்கமம் என்ற புதிய கான்சப்டை உருவாக்கி வருகின்றனர். இதன்படி, இரண்டு மெகா சீரியல் குடும்பங்கள் ஒருவருடன் ஒருவர் சந்தித்து கொள்வது போல காட்டப்படும். இந்த சங்கமம் நிகழ்ச்சிகளை அந்தந்த தொடர்களின் ரசிகர்கள் விரும்பிப்பார்ப்பார்கள். இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் – பாக்கியலட்சுமி சீரியல்களின் மெகா சங்கமம் எபிசோட் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சூழலில் கோபியின் தந்தைக்கு 75-வது பிறந்தநாள் வரவிருக்கிறது. இந்த பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாட நினைத்த அவர்களின் குடும்பம் தங்களுக்கு தெரிந்த நண்பர்களை வீட்டுக்கு அழைக்கின்றனர். அந்த வரிசையில் பாக்யாவும் தனது ஆருயிர் தோழியான ராதிகாவை தனது வீட்டு விசேஷத்திற்கு அழைக்கிறார்.
முன்னதாக, கோபி பாக்யாவிடம் தனது தந்தையின் பிறந்தநாள் விழாவிற்கு சொந்தகாரர்கள் வந்தால் போதும். நண்பர்கள் யாரையும் அழைக்க வேண்டாம் என்று பாக்யாவிடம் கட்டளையிட்டு இருந்தார். (எங்கே விழாவிற்கு ராதிகா வந்து விடுவாரோ என்ற பயம் ) அதையும் மீறி ராதிகாவை பாக்யாவை அழைக்க, வீட்டுக்கு வந்து கோபி பாக்யாவை கோபமாக கத்துகிறார்.
அப்பொழுது, அங்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தியும், தனமும் வந்து அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து விட்டு அழைத்து செல்கின்றனர். அப்பொழுது அங்கிருந்த வேலைக்காரி கஸ்தூரி தனத்திடம் வர வர ஐயா சரியில்லை. அவருக்கு வேற எங்கையோ தொடர்பு இருக்குன்னு நினைக்குறேன் என்று சொல்ல, தனம் அதிர்ச்சியடைகிறார்.
View this post on Instagram
கோபி அவ்வளவு நேரம் பாக்யாவை திட்டியும், தனம் மற்றும் மூர்த்தியிடம் தன் கணவரை விட்டுகொடுக்கவில்லை பாக்யா. ஏன் என்ன ஆச்சு எதுக்கு சண்டை போடுறீங்க என்று கேட்க, அப்பொழுது பாக்யா, இவர் எப்பவும் இப்படிதான் சண்டை போடுவார் என்று தெரிவித்தார். அதோடு அந்த ப்ரோமோவும் முடிவடைகிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்