அயோத்தி பட வெற்றி விழா...இயக்குநர், தயாரிப்பாளருக்கு தங்க செயின் பரிசளித்த சசிகுமார்!
அனைத்து விமர்சனங்களுமே பாசிட்டிவாக வந்த நிலையில், இப்படத்திற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.
![அயோத்தி பட வெற்றி விழா...இயக்குநர், தயாரிப்பாளருக்கு தங்க செயின் பரிசளித்த சசிகுமார்! Ayothi movie success party actor Sasikumar presents god chain to director and producer of the movie அயோத்தி பட வெற்றி விழா...இயக்குநர், தயாரிப்பாளருக்கு தங்க செயின் பரிசளித்த சசிகுமார்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/20/66bc7ca8125f6369a29b0cf2db40c65d1679323940186574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அயோத்தி படத்தின் வெற்றி விழாவில் தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் இயக்குனர் மந்திரகுமாருக்கும் தங்கச் செயின் ஒன்றை படத்தின் நாயகன் சசிகுமார் வழங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி ’சுப்ரமணியபுரம்’ என்கிற தரமான படத்தைக் கொடுத்த சசிகுமார், அதன்பின் படம் இயக்குவதைத் தாண்டி நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். ஆரம்பத்தில் கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களிலேயே அதிக அளவில் நடித்து வந்த சசிகுமார், தற்போது அனைத்துவித கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்ற படம் அயோத்தி.
சசிகுமார் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை மந்திர மூர்த்தி எனும் புதுமுக இயக்குனர் இயக்கியுள்ளார். சசிகுமார் உடன் பிரீத்தி அஸ்ரானி, யாஷ்பால் ஷர்மா, குக் வித் கோமாளி புகழ், போஸ் வெங்கட், அத்வைத் ஆகியோர் நடித்திருந்தனர். டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்திருந்த இப்படம், கடந்த மார்ச் 3ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பெரிய அளவில் விளம்பரம் இல்லாமல் ரிலீஸ் ஆன இப்படத்தின் கதை ரசிகர்களைக் கவர்ந்ததுடன் படத்தினை விமர்சகர்களும் கொண்டாடினர்.
அனைத்து விமர்சனங்களுமே பாசிட்டிவாக வந்த நிலையில், இப்படத்திற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. தொடர்ந்து லேட் பிக்-அப் ஆன இப்படம் தற்போது மூன்றாவது வாரத்தை வெற்றிகரமாகக் கடந்துள்ளது. அயோத்தி படத்தின் இந்த வெற்றியால் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ள நடிகர் சசிகுமார் படக்குழுவினருடன் தற்போது இந்த வெற்றியை கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.
இந்த சக்சஸ் மீட்டில் சசிகுமார், இயக்குனர் மந்திர மூர்த்தி, தயாரிப்பாளர் ரவீந்திரன், நடிகர் புகழ் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்நிலையில், முன்னதாக இந்த சக்சஸ் மீட்டில் தயாரிப்பாளர் ரவீந்தருக்கும், இயக்குனர் மந்திரகுமாருக்கும் தங்க செயின் ஒன்றை பரிசாக வழங்கினார் சசிகுமார். இந்நிலையில், அயோத்தி படத்தின் சக்சஸ் மீட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
முன்னதாக அயோத்தி படத்துக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை சந்தித்து, பல கதைகள் கேட்டு அவற்றில் இந்தக் கதையை தான் தேர்வு செய்ததாக படத்தின் இயக்குநர் அ.மந்திரமூர்த்தி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முன்னதாக அயோத்தி படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் மாதவராஜ் பதிவிட்டிருந்தது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மற்றொரு புறம் படத்தின் வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்து இயக்குநர் எஸ். ராமகிருஷ்ணன் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இரண்டு எழுத்தாளர்கள் அயோத்தி படத்தின் கதையை தங்களுடையது என ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டது சர்ச்சையைக் கிளப்பியது.
மேலும் படிக்க: Sam Neill: நான் மிகவும் நோய்வாய்ப்பட்டு இருக்கிறேன் - ரத்தப் புற்றுநோயால் அவதிப்படும் ஜூராசிக் பார்க் நடிகர்.. கவலையில் ரசிகர்கள்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)