Cinema Round-up : ஏமாற்றிய அவதார் 2; உதயநிதியால் கோபமான தில் ராஜூ.. தனுஷின் 50 வது படம்! - டாப் 5 சினிமா செய்திகள்!
Cinema Round-up : ஹாலிவுட்டின் பிரமாண்ட படைப்பு முதல் துணிவு VS வாரிசு சண்டை வரை.. திரையுலகை அமர்களப்படுத்தும் சினிமா செய்திகள் இங்கே!

எப்படி இருக்கு அவதார்?
இந்தியாவில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ள நிலையில், படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியாவில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான இப்படம் வசூலில் சாதனைகளை படைத்தது. அதுமட்டுமில்லாமல் உலகளவில் அவதார் படத்தின் முதல் பாகம் தான் அதிகமான வசூல் சாதனை செய்த படம் என்ற சாதனையை இன்றளவும் தக்கவைத்துள்ளது. இதனிடையே அவதார் படம் 5 பாகங்களாக 2 ஆண்டுகள் இடைவெளியில் வெளிவரும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவதார் படத்தின் இராண்டாம் பாகம் இன்று வெளியாகியிருக்கிறது.
அவதார் படத்தின் முழு விமர்சனம் : Avatar 2 Review: 13 ஆண்டு காத்திருப்பு; எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா அவதார்-2?.. - நேர்த்தியான நறுக் விமர்சனம்!
நடராஜன் வாழ்க்கை கதையில் நடிக்க போகும் சிவகார்த்திகேயன்
View this post on Instagram
சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடராஜன், அவரின் வாழ்க்கையை தழுவி எடுக்கபோகும் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கப்போவதாக மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார். அந்த படமானது தனது கிரிக்கெட் கேரியர் முடிந்த பின்னரே எடுக்க பட உள்ளதாக கூறிய அவர், அந்த படத்தை சிவாகார்த்திகேயனே இயக்கி தயாரிப்பாரா என்பது தெரியவில்லை என்று கூறினார்.
தியேட்டர் ஒதுக்கீட்டிற்கு சண்டை போட்ட தில் ராஜூ
விஜய்தான் நம்பர் 1 நடிகர். ஆகவே அவரது படத்திற்கு நிறைய ஸ்க்ரீன்கள் தரவேண்டும் - வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு. pic.twitter.com/mQZ8O3bWj4
— Blue Sattai Maran (@tamiltalkies) December 16, 2022
தமிழ்நாட்டில் அஜித்தைவிட விஜய் தான் நம்பர் ஒன் ஸ்டார் ஆனால் அவரது வாரிசு படத்திற்கு தமிழ்நாட்டில் போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று தயாரிப்பாளர் தில் ராஜு விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ள தில் ராஜு, "துணிவு படத்துக்கு நிகரான தியேட்டர்கள் தமிழ்நாட்டில் வாரிசு படத்திற்கு கிடைக்கவில்லை. தியேட்டர்களை சம அளவில் பிரித்து தருவதாக கூறுகிறார்கள். ஆனால், பல்வேறு தகவல்களின்படி விஜய் தான் தமிழ்நாட்டின் நம்பர் 1 ஸ்டாராக இருக்கிறார்.
அவருக்கு அடுத்த இடத்தில் தான் அஜித் இருக்கிறார். அதனால் வாரிசு படத்திற்கு அதிக தியேட்டர்கள் வேண்டும் என்று உதயநிதியிடம் கேட்கப்போகிறேன். அஜித்தின் துணிவு படத்தை ரிலீஸ் செய்யும் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம், துணிவு படத்திற்கு அதிக தியேட்டர்களை லாக் செய்துவிட்டு, வாரிசுக்கு போதுமான தியேட்டர்களை கொடுக்க மறுக்கின்றனர். துணிவுக்கு நிகராக வாரிசை ரிலீஸ் செய்ய போதுமான தியேட்டர்களை ஒதுக்கினாலே போதும். ஏனெனில் இது பிசினஸ்" என்று கூறியிருக்கிறார்.
தனுஷின் 50 ஆவது படத்தை இயக்கும் ஹெச்.வினோத்!
சதுரங்க வேட்டை மூலம் தனது ட்ரேட்மார்க்கை தமிழ் சினிமாவில் பதித்தவர் ஹெச்.வினோத். இவர் தீரன் அதிகாரம் ஒன்று ,நேர்கொண்ட பார்வை,வலிமை ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.இவர் தற்போது அஜித்தை வைத்து 'துணிவு' படத்தை இயக்கியிருக்கிறார்.இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனை தொடர்ந்து கமல் ஹாசனை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக சமீபத்தில் கூறப்பட்டது. அது மட்டுமின்றி தனுஷை வைத்தும் ஒரு படம் இயக்க விருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படத்தை மாஸ்டர்,கோப்ரா ஆகிய படங்களை தயாரித்த லலித் குமாரின் '7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் ஒப்பந்த வேலைகள் நடைபெற்று வருகிறதாம். இத்திரைப்படம் தனுஷின் 50 வது திரைப்படமாகும்.
திருப்பதிக்கு பின் தர்கா
6 வருடங்களுக்குப் பின் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த நடிகர் ரஜினிகாந்த், ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள பிரபல அமீன் பீர் பெரிய தர்காவிற்கு சென்றுள்ளார். இவருடன் பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானும் வந்திருந்தார். அவர்கள் இருவருக்கும் தர்கா சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

