எந்தன் நண்பியே.. நண்பியே.. செல்ல நாயை தோளில் சுமந்து வெளியேறும் உக்ரைன் பெண்.. குவியும் ஆன்லைன் அணைப்புகள்
உக்ரைனில் போர் பாதிப்பின் காரணமாக, அந்த நாட்டைவிட்டு வெளியெறும் பெண்மணி, தனது வயாதான செல்லப்பிராணி நாயை தோளில் சுமந்தபடி நடந்து செல்லும் ஃபோட்டோ இணையத்தில் பாராட்டுக்களை குவித்துவருகிறது.
உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யாவின் போர் 15 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது. உக்ரைன் நாட்டில் வசிக்கும் பல லட்ச கணக்கான மக்களும் வெளிநாட்டு மக்களும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இவர்களில், தன் வயதான நாயை தோளில் சுமந்துகொண்டு நாட்டை விட்டு வெளியேறிய உக்ரைன் பெண்மணியின் ஃபோட்டோ சமீபத்தில் இணையத்தில் வைரலானது. ஏராளமான நெட்டிசன்கள் அந்த பெண்ணின் வலிமைமிக்க செயல்பாட்டைப் பாராட்டினர்.
இந்த ஃபோட்டோவை பிரபல பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி (Athiya Shetty) நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.தன் நாயுடன் நாட்டை விட்டு வெளியேறும் பெண்ணின் பெயர் அலிசா, (Alisa). அவர் போரினால் பாதிக்கப்பட்ட நெருக்கடியான சூழலிலும், தனது நாயை தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவெடுத்துள்ளார். ரஷ்ய-உக்ரைன் போர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு அலிசா தனது தந்தையை இழந்ததாக கூறப்படுகிறது. மக்கள் கியேவை விட்டு வெளியேறும்போது, அலிசாவும் அவரது கணவரும் தங்கள் தந்தையின் அடக்கம் செய்வதற்கான ஆவணங்களை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அலிசாவுக்கு ஜெர்மன் நிறுவனம் ஒன்று, அவரும் அவருடைய இரண்டு நாய்களுடன் தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி போலந்துக்கு செல்ல உதவ முன்வந்தது. அவற்றில் ஒன்று வயதான ஜெர்மன் ஷெப்பர்ட். உக்ரேனிய பெண் தனது குடும்பத்துடன் போலந்துக்கு சென்றுகொண்டிருந்தபோது, அதே திசையில் நிறைய கார்கள் செல்வதைக் கண்டார். 3 முதல் 5 நாட்கள் வரை காருக்குள்ளேயே இருக்க முடியாது என்பதால், நடந்தே நாட்டின் எல்லையைக் கடக்க அவருடைய குடும்பம் முடிவு செய்தது.
அலிசாவின் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் 12 வயதானதாகும். அது ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் நடக்க சிரமப்பட்டு கீழே விழுந்தது. அலிசா மற்றவரிடம் உதவிக் கேட்டார். ஆனால் அனைவரும் மறுத்துவிட்டனர். பலரும் அலிசாவை தன் நாயை விட்டுவிட்டுச் செல்லும்படி கூறியிருக்கிறார்கள். ஆனால், அலிசா அதை மறுத்து தனது செல்லப்பிராணியைத் தோளில் சுமந்து கொண்டு நடக்க முடிவு செய்தார்.
ரஷ்ய படையெடுப்பிற்கு மத்தியில் உக்ரேனியர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை பாதுகாப்பாக வைத்திருக்க எல்லா தடைகளையும் வருகின்றனர். இந்த உணர்ச்சிகரமான கதையைப் பார்த்த அதியா ஷெட்டி, உடனடியாக அதை தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். அதியா ஷெட்டிக்கும் செல்லப்பிராணி என்றால் ரொம்பவே ப்ரியம்; இந்த நிகழ்ச்சியைக் கண்டு மனம் நெகிந்துள்ளார். அலியா தன் செல்லப்பிராணி மீது கொண்டுள்ள அன்பில் மகிழ்ந்து சமூக வலைதளங்களில் இதை பெரும்பாலாவர்கள் பாராட்டி பகிந்து வருகின்றனர்.
This Ukrainian woman carried her old dog for 17km to cross the border with her. 🇺🇦 pic.twitter.com/wCthUAjqyw
— Visegrád 24 (@visegrad24) March 10, 2022
Actor Suriya : தெலுங்குதான் தைரியம் கொடுத்துச்சு.. பேசுபொருளான சூர்யாவின் பேச்சு!!
Watch Video : காண ஓடிவந்த ரசிகர்கள்... கோலி செய்த அந்த செயல்! மிரண்டுபோன பாதுகாப்பு வீரர்கள்