Watch Video : காண ஓடிவந்த ரசிகர்கள்... கோலி செய்த அந்த செயல்! மிரண்டுபோன பாதுகாப்பு வீரர்கள்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலியை காண மூன்று ரசிகர்கள் மைதானத்திற்குள் ஓடி வந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இரண்டாவது நாளான நேற்றைய நாள் முடிவில் 447 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி முக்கிய வீரரான திரிமன்னேவின் விக்கெட்டை பறிகொடுத்துள்ளது. அவர் பும்ரா பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். இன்றைய ஆட்ட முடிவில் இலங்கை 28 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது.
இந்தநிலையில், நேற்று இலங்கை அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலியை காண மூன்று ரசிகர்கள் மைதானத்திற்குள் ஓடி வந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
Crazy love for @imVkohli #INDvsSL #PinkBallTest pic.twitter.com/Ilalxvf1xs
— jayanth a rao (@MTRBISIBELEBATH) March 13, 2022
அந்த ரசிகர்களின் ஒருவர் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த கோலியை நோக்கியை நெருங்கினார். மேலும், அவர் ரசிகர் தனது மொபைலை வெளியே எடுத்து கோலியிடம் கொடுத்து செல்ஃபி எடுக்கக் கேட்டார், அப்பொழுது, கோலி மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து, அந்த மூன்று ரசிகர்களை பிடிக்க பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வெகுநேரமாக பிடிக்க முயற்சி செய்தும், ரசிகர்கள் வளைந்து நெளிந்து ஓடி அவர்களுக்கு ஆட்டம் கட்டினார். அதனால் சிறிது நேரம் அங்கு ஆட்டம் தடைப்பட்டது. ஒரு கட்டத்தில் காவல்துறையினர் அந்த ரசிகர்களை பிடித்துவிட, அதைப்பார்த்த கோலி அவர்களை அழைத்துவருமாறு சைகை காட்டினார்.
தொடர்ந்து காவல்துறையினர் அந்த ரசிகர்களை அழைத்துவரவே, அவர்களுடன் கோலி மைதானத்தின் உள்ளேயே புகைப்படம் எடுத்து கொண்டார். இந்த புகைப்படமும் இணையத்தில் ட்ரெண்ட் ஆனதை தொடர்ந்து கோலியில் ரசிகர்கள் கோலியை கொண்டாடி வருகின்றனர்.
முன்னதாக, இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கி ஆடிய இந்திய அணி 303 ரன்களுக்கு 9 விக்கெட் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.
இந்திய அணியில் அதிகப்பட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 67 ரன்களும், ரிஷப் பண்ட் 50 ரன்களும் எடுத்து இருந்தனர். இலங்கை அணியில் ஜெயவிக்ரமா 4 விக்கெட்டுகளையும், எம்புல்டேனியா 3 விக்கெட்டுகளையும், விஸ்வா பெர்னாண்டோ, டி சில்வா மற்றும் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்