மேலும் அறிய

5 Years of Imaikkaa Nodigal: வில்லத்தனத்தில் மிரட்டிய அனுராக் காஷ்யப்.. ‘இமைக்கா நொடிகள்’ வெளியாகி 5 வருஷமாச்சு..!

நடிகர் அதர்வா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘இமைக்கா நொடிகள்’ படம் வெளியாகி இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவடைகின்றது. 

நடிகர் அதர்வா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘இமைக்கா நொடிகள்’ படம் வெளியாகி இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவடைகின்றது. 

கவனிக்க வைத்த படம் 

டிமாண்டி காலனி படத்தின் மூலம் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்ற  இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் இரண்டாவது படமாக இமைக்கா நொடிகள் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் அதர்வா, ராஷிகண்ணா, நயன்தாரா, விஜய் சேதுபதி, இயக்குநர் அனுராக் காஷ்யப், பேபி மானஸ்வி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஹிப் ஹாப் தமிழா இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்த படம் தமிழில் அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா, பேபி மானஸ்வி ஆகியோருக்கு முதல் படமாகும் என்பதால் மிகப்பெரிய கவனத்தை பெற்றது. 

சிலிர்க்க வைத்த கதை 

சீரியல் க்ரைம் த்ரில்லர் கதைகள் தமிழில் எப்போவாவது வெளிவரும். இது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. அப்படியான ஜானரில் வெளியானது இமைக்கா நொடிகள். ‘பெங்களூரு நகரில் அடுத்தடுத்து விஐபிக்கள் அனுராக் காஷ்யப்பால் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். இதனை விசாரிக்க சிபிஐ அதிகாரியான நயன் நியமிக்கப்படுகிறார். அவரின் விசாரணையில் குற்றவாளியை நெருங்கும் போதெல்லாம் பின்னடைவை சந்திக்கிறார். ஒரு கட்டத்தில் அதர்வா தான் குற்றவாளி என அனுராக் நம்ப வைக்கிறார். இதற்கிடையில் காதலி ராஷிகண்ணா கடத்தப்படுவதால் களத்தில் இறங்கும் அதர்வாவுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருக்கிறது. நயன்தாராவுக்கும் இந்த குற்றத்தில் பங்கிருக்கிறது என தெரிய வருகிறது. இறுதியில்  உண்மையான குற்றவாளி யார்?.. இந்த கொலைகளுக்கான காரணம் என்ன? என்பதே இப்படத்தின் கதையாகும். 

போதும் போதும் என சொல்லும் அளவுக்கு ட்விஸ்ட்கள் வைத்து படம் பார்ப்பவர்களை சிலிர்க்க வைத்து டயர்டாக வீட்டுக்கு அனுப்பியிருப்பார்கள். 

ஆக்‌ஷனில் மிரட்டிய பிரபலங்கள்

முதலில் அனுராக் ஆக்‌ஷனில் மிரட்ட, கதை அப்படியே நயன்தாரா பக்கம் திரும்பும். இரண்டாம் பாதியில் அதர்வா ஆக்‌ஷன் ஹீரோவாக மாற கிட்டதட்ட 3 மணி நேரம் ‘இங்க என்ன நடக்குது?’ என கேள்வியெழுப்பும் அளவுக்கு 3 பேரும் அசத்தியிருந்தார்கள். நடுவே ராஷிக் கண்ணாவுடனான அதர்வா காதல், இரண்டாம் பாதியில் வரும் விஜய் சேதுபதி - நயன் காதல் என படம் பார்ப்பவர்களை முழு திருப்திப்படுத்தியிருப்பார்கள். தமிழுக்குப் புதுமுகமான அனுராக் காஷ்யப் வில்லனாக தூள் கிளப்பியிருந்தார். மேலும் நடிகர் கொட்டாச்சியின் மகளான பேபி மானஸ்வி ஒரு காட்சியில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். 

ஹிப்ஹாப் தமிழா இசையில் பாடல்களும் ஓரளவு வரவேற்பை பெற்ற, படத்தின் நீளத்தை மட்டும் சற்று குறைத்திருந்தால் இமைக்கா நொடிகள், ‘இமைக்காமல்’ ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கும். 

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Embed widget