Anupama Parameswaran: ”செல்ஃபி எடுக்கணும்..” கார் டயரை டேமேஜ் செய்த ரசிகர்கள்! பதறி ஓடிய அனுபமா!
செல்ஃபி எடுத்துகொண்டே அனுபமா கிளம்பியதால் கோபமடைந்த ரசிகர்கள் அவருடைய காரில் இருந்து காற்றை பிடுங்கிவிட்டனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு, `பிரேமம்’ திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை அனுபமா பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போதும் கைவசம் படங்களை வைத்துள்ள அனுபமா தீவிரமாக பணியாற்றி வருகிறார். படங்கள் ஒருபக்கம் இருந்தாலும், இன்ஸ்டா விளம்பரங்கள், கடை திறப்பு போன்ற வேலைகளையும் பக்கவாட்டில் பக்காவாக செய்து வரும் அனுபமா சமீபத்தில் ரசிகர்கள் அன்பில் திக்குமுக்காடி விட்டால்போதும் என தப்பித்து ஓடியுள்ளார்.
View this post on Instagram
கடை திறப்பு..
நடிகை அனுபமா, சமீபத்தில் தெலுங்கானாவில் உள்ள சூர்யாபேட்டாவில் உள்ள வணிகவளாக திறப்புக்கு சென்றுள்ளார். நடிகை அனுபமா வருகிறார் என்ற தகவல் தெரிந்ததும் அவரது ரசிகர்கள் அதிகாலை முதலே காத்திருந்துள்ளனர். அழகாக சிரித்துக்கொண்டே மாலுக்குள் நுழைந்த அனுபமா கடைகளை திறந்து வைத்துவிட்டு மீண்டும் ஹைதராபாத் திரும்புவதற்காக கிளம்பினார். ஆனால் காலை முதலே காத்திருந்த ரசிகர்கள், தங்களுடன் அனுபமா செல்ஃபி எடுக்க வேண்டுமென்றும், உடனடியாக கிளம்பாமல் சிறிது நேரம் அங்கேயே இருக்க வேண்டுமென்றும் குரல் எழுப்பியுள்ளனர். அதையும் மீறி அனுபமா தன்னுடைய காரை நோக்கி நடந்துள்ளார். உடனடியாக பாதுகாப்பை மீறிய ரசிகர்கள் பலர் அவருடன் முண்டியடித்துக் கொண்டு செல்ஃபி எடுத்துள்ளனர்.
View this post on Instagram
செல்ஃபி எடுத்துகொண்டே அனுபமா கிளம்பியதால் கோபமடைந்த ரசிகர்கள் அவருடைய காரில் இருந்து காற்றை பிடிங்கிவிட்டனர். ரசிகர்கள் இந்த சிறுபிள்ளைத்தனமான வேலையால் ஷாக்கான அனுபமா மீண்டும் மாலுக்குள் சென்றார். உடனடியாக மற்றொரு காரை ஏற்பாடு செய்த மால் நிர்வாகத்தினர் அனுபமாவை பத்திரமாக ஹைதராபாத்துக்கு அனுப்பி வைத்தனர். என்னதான் பாசமான ரசிகர்கள் என்றாலும் கார் டயரை எல்லாம் டேமேஜ் செய்த சம்பவம் அனுபமாவுக்கு பெரிய ஷாக்கை கொடுத்ததாக கூறப்படுகிறது. இனி வரப்போகும் காலங்களில், கடை திறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் கூடுதல் பாதுகாப்பு இருந்தால் மட்டுமே கலந்துகொள்வேன் என அனுபமா முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.