மேலும் அறிய

''பாண்டியராஜன் கடுப்பானார்.. இளையராஜா சிரிச்சார்'' - ரமேஷ் கண்ணா சொன்ன பாடல்பதிவு ரகசியம்

என் அண்ணன் மூலமாதான் எனக்கு பாடல்களை உற்று கேட்டு ரசிக்கும் ஆர்வம் உண்டாச்சு. ராஜ் கபூர் படத்தின் பாடல்களை அப்படிச் சிலாகிப்பார்.

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு என்று இருக்கும் ரசிகர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமல்ல. அவர்களை ஒரு வகையான கல்ட் க்ரூப் எனலாம், அவரைப் பற்றிய சுவாரசியமான தகவல்களைப் பகிர்வது முதல் அவரது பாடல்களை அதிதீவிர  அறுவை சிகிச்சை செய்து அதில் இருக்கும் ராகம், உணர்வு, அந்தப் பாடலின் தனித்துவம் என சிலாகிப்பது வரை அவர்களை ஒருவகை பக்தர்கள் முகாம் என வகைப்படுத்தலாம். அப்படியானவர்களின் தாக்கத்தால் தொலைக்காட்சிகள் பல்வேறு இசை சார்ந்த நிகழ்ச்சிகளை நிகழ்த்தத் தொடங்கின. அப்படி உருவானதுதான் மனதோடு மனோ நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் ஒருமுறை பங்கேற்ற இயக்குநர் ரமேஷ் கண்ணா ஒரு அதிதீவிர இளையராஜா ரசிகர். அவரது இளையராஜா உடனான பயணம், இசையின் மீதான ஆர்வத்தின் தொடக்கம் மற்றும் திரை அனுபவங்கள் குறித்து நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார். 

”நான் துணை இயக்குநராக 100 படங்கள் வரை உழைத்திருக்கிறேன். 60 படங்கள் வொர்க் செய்திருக்கிறேன். 60 படங்கள் வரை நடித்திருக்கிறேன். என் அண்ணன் மூலமாதான் எனக்கு பாடல்களை உற்று கேட்டு ரசிக்கும் ஆர்வம் உண்டாச்சு. ராஜ் கபூர் படத்தின் பாடல்களை அப்படிச் சிலாகிப்பார். நமக்கு இந்தி புரியலை என்றாலும் அந்தப் பாடல்களை கேட்கப் பிடிக்கும். வட இந்தியர்கள் பாடல்களைச் சிலாகிப்பதில் வேற லெவல் எனலாம். திரையில் பாடல் தோன்றினால் அப்படியே சில்லறையை பாடல்களுக்காக வாரி இரைப்பார்கள்”


'பாண்டியராஜன் கடுப்பானார்.. இளையராஜா சிரிச்சார்'' - ரமேஷ் கண்ணா சொன்ன பாடல்பதிவு ரகசியம்

“ஆண்பாவம் படத்தில் அசோசியேட் டைரக்டராக ஒர்க் செய்தேன்.இளையராஜாதான் அந்தப் படத்துக்கு இசையமைப்பாளர். ‘காதல் கசக்குதையா’ பாடல் கம்போசிங் நடக்கும் சமயம்  அவரது அறையில் பாண்டியராஜன் சார் உட்கார்ந்திருந்தார். அவருடன் நானும் போய் உட்கார்ந்தேன்.அந்த பாடலில் ‘பியு சின்னப்பா காலத்திலே’ என ஒரு வரி வரும் உடனே நான் ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ”னு எடுத்துவிட்டேன்.. ‘எம்.எஸ்.வி காலத்திலே’ என ஒரு வரி வரும் அதற்கும் ஒரு பாடலைச் சொன்னேன். நான் பேசுவதைப் பார்த்து பாண்டியராஜன் சாருக்கு கடுப்பு. கம்பொசிங்கை கெடுத்துவிடுவேன் என்கிற பயம். ஆனால் ராஜா சார் என்னைப் பார்த்துச் சிரித்தார். அதிலிருந்து பாண்டியராஜன் கம்போசிங்குக்கு உட்கார்ந்தால் அவருடன் உட்கார எனக்கும் அனுமதி கிடைத்தது. அப்படி கம்போசிங்குக்கு உட்கார்ந்து கிடைத்த அருமையான பாடல்களில் ஒன்றுதான் ‘அடி ஆத்தாடி...’ என் படத்துக்குதான் கம்போஸ் செய்கிறார் என நினைத்தால் என் கண் முன்னாடியே அந்த ரெக்கார்டை எடுத்து தன்னுடைய உதவியாளரிடம் கொடுத்துவிட்டு..’பாட்டு வந்துருச்சுனு சொல்லி இதை பாரதிராஜா கிட்ட கொடு’ன்னு சொன்னார். என் கண் முன்னாடியே அந்தப் பாடல் ‘கடலோரக் கவிதைகள்’ படத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. என்றார்.

தலைப்பு செய்திகள்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்
செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்
அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!
அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Embed widget