மேலும் அறிய

Asin Reaction to Divorce : கணவரை விவாகரத்து செய்கிறாரா அசின்? அவரே கொடுத்த விளக்கம்..

நடிகை அசின் - ராகுல் சர்மா விவாகரத்து செய்ய உள்ளனர் என்று பரவிய வதந்திக்கு சோசியல் மீடியா மூலம் சரியான பதிலடியை கொடுத்துள்ளார் அசின்.   

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி இடத்தை பிடித்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அசின். உள்ளம் கேட்குமே திரைப்படம் தான் அசின் நடித்த முதல் தமிழ்  படம் என்றாலும் அப்படம் சில காரணங்களால் வெளியாகாமல் தள்ளிப்போனது. அதனால் அசின் நடிப்பில் 2004ம் ஆண்டு முதலில் வெளிவந்த படம் M. குமரன் S/O மகாலட்சுமி. தனது 15 வயதிலேயே மலையாள படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் அதற்கு பிறகு தெலுங்கு படத்திலும் அறிமுகமானார். 

Asin Reaction to Divorce : கணவரை விவாகரத்து செய்கிறாரா அசின்? அவரே கொடுத்த விளக்கம்..

M. குமரன் S/O மகாலட்சுமி படத்தில் நடிகர் ஜெயம் ரவி ஜோடியாக மலையாள பெண்ணாக கலக்கியிருப்பார். ஜெயம் ரவி அப்படத்தில் அசினை மலபார் என அழைப்பது பெரிய அளவில் பிரபலமானது. முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்ததால் அதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. கஜினி, சிவகாசி, மஜா, உள்ளம் கேட்குமே, போக்கிரி, தசாவதாரம், வேல் என அடுத்தடுத்து வெளியான அனைத்து படங்களுமே ஹிட் அடித்தன. கிட்டத்தட்ட இரண்டே ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகையானார் அசின். 

தமிழில் முன்னணி நடிகையின் அந்தஸ்தில் இருந்த அசினுக்கு ஹிந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க பாலிவுட் நடிகையானார். அங்கும் முன்னணி நடிகர்களான அமீர்கான், சல்மான் கான் என ஸ்டார் நடிகர்களின் ஜோடியாக நடித்தார். இப்படி ஒரு கம்ப்ளீட் பான் இந்தியன் நடிகையாக வலம் வந்த அசின் திடீரென மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ராகுல் சர்மாவை 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு பை பை சொன்ன அசின் ஒரு குடும்ப தலைவியாக இருந்து வந்தார். இந்த தம்பதியருக்கு அரின் என ஒரு மகள் உள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அசின் அவ்வப்போது மகளின் புகைப்படங்களை பகிர்வது வழக்கம். 

மிகவும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் அசின் குறித்த வதந்தி ஒன்று தற்போது இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகிறது. அசின் தனது கணவர் ராகுல் சர்மாவை விவாகரத்து செய்ய உள்ளார் என்பது தான் அந்த வதந்தி.ராகுல் சர்மாவிற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதால் அதை அறிந்து அசின் கண்டித்த போதும் ராகுல் அந்த பெண்ணுடன் தொடர்பை கைவிடாததால் கோபத்தில் அசின் அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்து விட்டார் என்றும் தற்போது அவர் மகளுடன் தனது பெற்றோர் வீட்டில் உள்ளார் என்ற செய்தி மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Asin Reaction to Divorce : கணவரை விவாகரத்து செய்கிறாரா அசின்? அவரே கொடுத்த விளக்கம்..

இந்த விவாகரத்து செய்தியை கேள்விப்பட்ட அசின் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். "எங்கள் கோடை விடுமுறையை கொண்டாடி வருகிறோம். இருவரும் நேருக்கு நேர் காலை உணவை என்ஜாய் செய்து கொண்டிருக்கும் இந்த வேளையில் முற்றிலும் கற்பனையான நியூஸ் ஒன்றை பற்றி அறிந்தோம். 

எங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து எங்களின் திருமணத்தை பற்றி திட்டமிட்ட நேரத்தை இந்த தருணம் நினைவூட்டுகிறது. நாங்கள்  இருவரும் பிரிந்து விட்டோமென நியூஸ் சுற்றியது. தயவு செய்து வேறு ஏதாவது செய்ய முயற்சி செய்யுங்கள். 

இதற்காக எங்களின் 5 நிமிடத்தை வீணடித்ததில் வேதனை. இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் நண்பர்களே! " என பதிவிட்டு உள்ளார். இந்த ஆதாரமற்ற வதந்திக்கு அசின் ரியாக்ஷன் அவ்வளவே தான்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பெயர், கொடியை பயன்படுத்தாத; நடைபயணம் வேண்டாம்: அன்புமணியை எச்சரிக்கும் ராமதாஸ்
பெயர், கொடியை பயன்படுத்தாத; நடைபயணம் வேண்டாம்: அன்புமணியை எச்சரிக்கும் ராமதாஸ்
சனாதன தர்மத்தை காப்பாற்றினாரா பவன் கல்யாண் ? 'ஹரிஹர வீர மல்லு ' படம் எப்டி இருக்கு. விமர்சனம் இதோ
சனாதன தர்மத்தை காப்பாற்றினாரா பவன் கல்யாண் ? 'ஹரிஹர வீர மல்லு ' படம் எப்டி இருக்கு. விமர்சனம் இதோ
OP Sindoor Parliament: 28ம் தேதி - நெருப்பு மழையாய் கேள்விகள், வாய் திறப்பாரா மோடி? நேருவை இழுக்குமா பாஜக அரசு?
OP Sindoor Parliament: 28ம் தேதி - நெருப்பு மழையாய் கேள்விகள், வாய் திறப்பாரா மோடி? நேருவை இழுக்குமா பாஜக அரசு?
Hondas New Hybrid SUV: நச்சுன்னு 3 புதிய ஹைப்ரிட் கார்கள், 3 வருடங்களுக்கு ஸ்கெட்ச் - மீண்டு வர ஹோண்டா திட்டம்
Hondas New Hybrid SUV: நச்சுன்னு 3 புதிய ஹைப்ரிட் கார்கள், 3 வருடங்களுக்கு ஸ்கெட்ச் - மீண்டு வர ஹோண்டா திட்டம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tanushree Dutta Emotional | சொந்த வீட்டிலேயே டார்ச்சர்.. கதறி அழுத நடிகை! வெளியான பகீர் வீடியோ
TVK Vijay Meets Rahul Gandhi | ராகுலை சந்திக்க திட்டம் தவெக காங்கிரஸ் கூட்டணி? விஜய் போடும் கணக்கு
Ponmudi vs Lakshmanan| CV சண்முகத்துடன் DEAL?லட்சுமணனுக்கு எதிராக ஸ்கெட்ச் ஆட்டத்தை தொடங்கிய பொன்முடி
ADMK BJP Alliance  | ”கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” தடாலடியாய் சொன்ன இபிஎஸ்! குழப்பத்தில் NDA கூட்டணி
“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெயர், கொடியை பயன்படுத்தாத; நடைபயணம் வேண்டாம்: அன்புமணியை எச்சரிக்கும் ராமதாஸ்
பெயர், கொடியை பயன்படுத்தாத; நடைபயணம் வேண்டாம்: அன்புமணியை எச்சரிக்கும் ராமதாஸ்
சனாதன தர்மத்தை காப்பாற்றினாரா பவன் கல்யாண் ? 'ஹரிஹர வீர மல்லு ' படம் எப்டி இருக்கு. விமர்சனம் இதோ
சனாதன தர்மத்தை காப்பாற்றினாரா பவன் கல்யாண் ? 'ஹரிஹர வீர மல்லு ' படம் எப்டி இருக்கு. விமர்சனம் இதோ
OP Sindoor Parliament: 28ம் தேதி - நெருப்பு மழையாய் கேள்விகள், வாய் திறப்பாரா மோடி? நேருவை இழுக்குமா பாஜக அரசு?
OP Sindoor Parliament: 28ம் தேதி - நெருப்பு மழையாய் கேள்விகள், வாய் திறப்பாரா மோடி? நேருவை இழுக்குமா பாஜக அரசு?
Hondas New Hybrid SUV: நச்சுன்னு 3 புதிய ஹைப்ரிட் கார்கள், 3 வருடங்களுக்கு ஸ்கெட்ச் - மீண்டு வர ஹோண்டா திட்டம்
Hondas New Hybrid SUV: நச்சுன்னு 3 புதிய ஹைப்ரிட் கார்கள், 3 வருடங்களுக்கு ஸ்கெட்ச் - மீண்டு வர ஹோண்டா திட்டம்
சமூகத்தின் இருண்ட பக்கத்தை பேசுகிறது மாரீசன்...புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன்
சமூகத்தின் இருண்ட பக்கத்தை பேசுகிறது மாரீசன்...புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன்
New Vice President: புதிய குடியரசு துணை தலைவர் யார்? போட்டியாளர்கள் இதை செஞ்சா தான்.. பாஜக டிமேண்ட்
New Vice President: புதிய குடியரசு துணை தலைவர் யார்? போட்டியாளர்கள் இதை செஞ்சா தான்.. பாஜக டிமேண்ட்
TN weather Reoprt: விடாது கருப்பாய் கொட்டும் மழை, இன்று எங்கெல்லாம் ரெட் அலெர்ட் - சென்னை வானிலை நிலவரம்
TN weather Reoprt: விடாது கருப்பாய் கொட்டும் மழை, இன்று எங்கெல்லாம் ரெட் அலெர்ட் - சென்னை வானிலை நிலவரம்
Rishabh Pant: ரிஷப் பண்டிற்கு என்ன ஆச்சு..! வீங்கிய வலது கால் பாதம், சீரிஸ் கதை முடிஞ்சதா? பிசிசிஐ அப்டேட்
Rishabh Pant: ரிஷப் பண்டிற்கு என்ன ஆச்சு..! வீங்கிய வலது கால் பாதம், சீரிஸ் கதை முடிஞ்சதா? பிசிசிஐ அப்டேட்
Embed widget