Arunraja Kamaraj on Karthi: எடுத்த இரண்டு படமும் ஹிட்டு.. கார்த்தியுடன் கைகோக்கும் அருண்ராஜா.. தென் ஆப்பிரிக்கா செல்லும் படக்குழு..!
அருண்ராஜா காமராஜ் இயக்கும் அடுத்தப்படத்தில் நடிகர் கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
![Arunraja Kamaraj on Karthi: எடுத்த இரண்டு படமும் ஹிட்டு.. கார்த்தியுடன் கைகோக்கும் அருண்ராஜா.. தென் ஆப்பிரிக்கா செல்லும் படக்குழு..! Arunraja Kamaraj to direct Karthi next after udhayanidhi stalins nenjukku needhi Arunraja Kamaraj on Karthi: எடுத்த இரண்டு படமும் ஹிட்டு.. கார்த்தியுடன் கைகோக்கும் அருண்ராஜா.. தென் ஆப்பிரிக்கா செல்லும் படக்குழு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/21/efb8e3f60d5299760755fa757df498c3_original.gif?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அருண்ராஜா காமராஜ் இயக்கும் அடுத்தப்படத்தில் நடிகர் கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தத்தகவலின் படி, “ அருண்ராஜா காமராஜ் இயக்கும் இந்தப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். இந்தப்படம் முழுக்க முழுக்க தென்னாப்பிரிக்காவில் நடக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
பலபடங்களில் பாடலாசிரியராகவும், பாடகராகவும் பணியாற்றிய அருண்ராஜா காமராஜ் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘கனா’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதனையடுத்து அருண்ராஜா கார்த்தியிடம் இந்தக்கதையை சொல்லி இருக்கிறார். ஆனால் அப்போது கார்த்தி பல படங்களில் கமிட் ஆகியிருந்ததால் அந்தக்கதையில் நடிக்க முடியாமல் போனதாம். அண்மையில் இவரது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. ஆர்டிக்கிள் 15 படத்தின் ரீமேக்கான இந்தப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
View this post on Instagram
ராஜூமுருகன் இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்துவரும் கார்த்தி அடுத்ததாக இந்தப்படத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘விருமன்’ படம் வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)