AR Rahman| ஏ.ஆர்.ரஹ்மான் நடிகராவாரா ? - இசையமைப்பாளர் கொடுத்த பளீச் பதில்!
ஏற்கனவே விஜய் ஆண்டனி , ஜி.வி.பிரகாஷ் குமார் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் நடிகர்கள் அவதாரம் எடுத்து அதிலும் கலக்கி வருகின்றனர்.
தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் உலக சினிமாக்களிலும் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் நடிகர் ஏ.ஆர்.ரஹ்மான். மணிரத்தினம் இயக்கத்தில் உருவான ரோஜா திரைப்படமே இவரது முதல் திரைப்படமாகும். இந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் தேசிய விருதும் பெற்றார். தென்னிந்திய சினிமாக்கள் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என ஏ.ஆர்.ரஹ்மான் உச்ச நட்சத்திரமாக விளங்கிறார். ‘ஸ்லம் டாக் மில்லினர் ‘ படத்திற்காக இவருக்கு உயரிய விருதான ஆஸ்கர் விருதும் கிடைத்தது. இது தவிர கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது, தேசியத் திரைப்பட விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவரது இசையமைப்பில் மிமி என்ற பாலிவுட் திரைப்படம் வெளியானது. அதன் டைட்டில் சாங் உருவான விதம் குறித்த வீடியோ விரைவில் வெளியிடப்படும் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதற்கு கீழே கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர் “ உங்கள் நடிப்பில் வெளியாகும் படத்தை நாங்கள் எப்போது எதிர்பார்க்கலாம் “என கேட்டனர். அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான் “ரொம்ப நாளுக்கு நான் நிம்மதியா இருக்கனும்னு நினைக்கிறேன் , அதுல உங்களுக்கு விருப்பமில்லையா ?” என நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே விஜய் ஆண்டனி , ஜி.வி.பிரகாஷ் குமார் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் நடிகர்கள் அவதாரம் எடுத்து அதிலும் கலக்கி வருகின்றனர்.
முன்னதாக ரஹ்மான் திரைக்கதை மற்றும் தயாரிப்பில் ‘99 சாங்க்ஸ்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. தயாரிப்பாளர், இசையமைப்பாளர், கதையாசிரியர் அவதாரம் எடுத்த இவரை நடிகராக பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கும் இருந்துவரும் நிலையில் இப்படியொரு விளக்கம் அளித்திருக்கிறார் .ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது தமிழில், விக்ரம் நடிக்கும் கோப்ரா, மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன், சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான், சிம்பு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு மற்றும் சிம்பு நடிப்பில் உருவாகும் பத்து தல ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் சமீப காலமாக ஆக்டிவாக இருப்பவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். சமீபத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா இவரை யாரென்று தெரியாது என கூறிய சம்பவம் மிகப்பெரிய வைரலானது. ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒரு தனித்திறமை உள்ளது.இசையமைப்பாளர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் என ஒருவர் இருக்கிறாராம். அவர் யாரென்றே எனக்குத் தெரியாது. வருடத்துக்கு ஒரு ஹிட் பாடல் கொடுப்பாரே அவர்தானே அவர். ஆஸ்கர் வாங்கியிருக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். அதெல்லாம் எனக்கு முக்கியமல்ல.எங்கள் குடும்பம் மிகவும் பாரம்பரியமானது. என்.டி.ஆர் குடும்ப கௌரவத்தை ஒப்பிடும் பொழுது, பாரத ரத்னாவே எங்கள் பரம்பரையின் காலடிக்கு சமமானது என ஏளனமாக பேசியிருந்தார் . இது ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை பொருத்துக்கொள்ள முடியாத ஏ. ஆர். ரஹ்மானின் ரசிகர்கள் பலர் , பாலகிருஷ்ணா என்பவர் யார்? ஏ.ஆர்.ரஹ்மானை பற்றி பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என கேள்வி எழுப்பி அதனை இணையத்தில் டிரெண்டாக்கினர். ஆனால் இதல்லாம் தனக்கு தேவையில்லாத சம்பவம் என்பது போல ஏ.ஆர்.ரஹ்மான் மௌனம் கலைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.