மேலும் அறிய

Cinema Headlines August 22 : 'வாழை' படத்துக்கு உணர்ச்சியால் பாராட்டும் பிரபலங்கள்... இன்றைய சினிமா செய்திகள் 

Cinema Headlines : AR ரஹ்மான் இயக்குனராக அறிமுகமாகும் "Le Musk" திரைப்படம் உலக சினிமாவில் புதிய மைல் கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'வாழை' படத்துக்கு தொடர்ந்து பாராட்டு குவிந்து வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் புதிய மைல்கல் :

கோடிக்கணக்கான ரசிகர்களின் ஃபேவரட் இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான்  "Le Musk" படத்தின் புதிய இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். 12  வேறுப்பட்ட இசைத் தொகுப்புகளுடன், உலகளாவிய அளவில் இன்று வெளியிடப்பட்ட இந்த ஆத்மார்த்தமான இசை ஆல்பம், ரஹ்மானின் பிரபலமான படைப்புகளை போன்று, எல்லைகளை தாண்டி, கேட்பவர்களை இசையால் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Believe Music உடன் இணைந்து இந்த உலகலாவிய வெளியீட்டினால் , AR ரஹ்மான் தனது புதுமையான படைப்புகளை சர்வதேச ரசிகர்களிடம் கொண்டு சென்றுள்ளார்.AR ரஹ்மான் இயக்குனராக அறிமுகமாகும் இப்படம், உலக சினிமாவில் புதிய மைல் கல்லாக அமையும்.

'வாழை' பார்த்த பாலா :

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள 'வாழை' படம் ஆகஸ்ட் 23ம் தேதியான  நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வாழை திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் சில நாட்கள் முன்பாக நடைபெற்றது. தமிழ் திரையுலகின் பல்வேறு முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தை பார்வையிட்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். படம் பார்த்த அனைவருமே உணர்ச்சிவசப்பட்டு மாரி செல்வராஜை கட்டி அணைத்து பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் வாழை படத்தை பார்த்த இயக்குநர் பாலா, மாரி செல்வராஜை கட்டி அனைத்து முத்தமிட்டு நீண்ட நேரமாக பேச வார்த்தை இல்லாமல் பாலா மாரி செல்வராஜின் கைகளை பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டு சென்றார்.

பிக் பாஸ் பாலா குமுறல் :

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். சமீபத்தில்  ஜே.எஸ்.கே தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் சதீஷ் குமார் தயாரிப்பில்  'ஃபயர்' திரைப்படத்தில் நடித்தார்.  ரக்ஷிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், சிங்கம் புலி, சாந்தினி தமிழரசன், காயத்ரி ஷா, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.  இப்படத்தில் நடித்ததற்காக தனக்கு ஒரு ரூபாய் கூட சம்பளமாக கொடுக்கப்படவில்லை என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரை கெட்ட வார்த்தையில் திட்டியிருந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து மீண்டும் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். ஒதுக்கப்பட்டவர்கள் , நசுக்கப்பட்டவர்களின் படங்களை வாரிசு நடிகர்களை வைத்து படம் எடுப்பது தான் வேடிக்கையான விஷயம்” என பதிவிட்டு இருந்தார். காய் அவரே நீக்கி அதற்கான விளக்கத்தையும் கொடுத்து இருந்தார்.

கருணாஸின் சர்ச்சையான கருத்து:

திரைத்துறையில் நடிகைகளிடம் அட்ஜஸ்மெண்ட் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு நடிகர் சங்க துணைத் தலைவரான கருணாஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. "அட்ஜஸ்மெண்ட் சினிமாவில் மட்டும் தான் உள்ளது என உங்களால் சொல்ல முடியுமா. அது இருவர் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட விஷயம்.யாருடைய விருப்பமில்லாமல் இங்கு எதுவும் நடப்பதில்லை"  என தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

சூரியின் முத்த மழை:

நாளை சூரியின் 'கொட்டுக்காளி' படம் வெளியாகும் அதே நாளில் இயக்குநர் மாரி செல்வராஜின் 'வாழை' படமும் வெளியாக உள்ளது. சிறப்பு திரையிடல் காட்சியை பார்வையிட்ட பிரபலங்கள் பாராட்டுகளை குவித்து வருகிறார்கள். அந்த வகையில் படத்தை பார்த்த நடிகர் சூரி, வெளியில் வந்ததும் மாரி செல்வராஜை கட்டியணைத்து முத்தத்தால் உணர்வுகளை வெளிப்படுத்தி விட்டார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Embed widget