AR Rahman: மன்னிப்பாயா.. முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏ.ஆர்.ரஹ்மான்!
தனது முன்னாள் மனைவி சாய்ரா பானுவிடம் மன்னிப்பு கேட்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் பேட்டி அளித்தார். அவரிடம் பேட்டி எடுத்த தொகுப்பாளர் தேவதர்ஷினி அவரிடம் அவரது பாடல் வரிகளில் அவரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான் என்ன கூறினார் என்பதை கீழே காணலாம்.
கேள்வி: மன்னிப்பாயா?
ஏ.ஆர்.ரஹ்மான்: எல்லாருகிட்டயும் கேக்குறேன். சும்மா சொன்னேன். என் மகள், என் முன்னாள் மனைவி, என் மகன்.
கேள்வி: ஆளப்போறான் தமிழன்?
ஏ.ஆர்.ரஹ்மான் : ஆளப்போறான் தமிழன்னு இருக்கு. ஆண்டான் தமிழன்னு வரனும். ஆண்டுகொண்டு இருக்கிறான் தமிழன்னு வரனும். ராமானுஜம், திருவள்ளுவர், பாரதி, மணிரத்னம், ஷங்கர், இளையராஜா, சுந்தர் பிச்சை இவர்களை உத்வேகத்திற்கு உதாரணமாக எடுத்து கொள்ளுங்கள்.
கேள்வி: டேக் இட் ஈஸி பாலிசி?
ஏ.ஆர்.ரஹ்மான்: எல்லாமே. நிறைய பேரு வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிகிட்டு இருக்காங்க. அன்னைக்கு சொன்னேன்ல. இது மாதிரி ஆகிடுச்சுல. அந்த லக்கேஜை எடுத்துகிட்டு நிகழ்காலத்தையும், அடுத்தவங்க எதிர்காலத்தையும் வீணடிக்கிறார்கள். அதை அப்படியே பிடித்துக்கொண்டு விடுவதில்லை. அதை சரிபண்ண வாய்ப்பு கொடுத்தாலும் அப்படியே இருக்காங்க. ஒவ்வொரு நாளும் வித்தியாசமான நாள். வாழ்க்கையில பற்றில்லாமல் இருக்கனும். இல்லாவிட்டால் கஷ்டம்.
கேள்வி: சின்ன சின்ன ஆசை?
ஏ.ஆர்.ரஹ்மான்: ஆசை இல்லாம இருக்கனும்ங்குறதுதான் சின்ன, சின்ன ஆசை. ஆசை இல்லாம இருக்க முடியும்.
கேள்வி: உசுரே நீதான்?
ஏ.ஆர்.ரஹ்மான்: ரசிகர்கள்தான். இல்லனா வண்டி ஓடாதுல. முடிஞ்சது கதை. ஒவ்வொரு ரசிகர்களுக்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் நன்றி. நான் எங்கே பாடினாலும் தமிழ்னாலும், இந்தினாலும் அமைதியா கேட்டுட்டு. உசுரே அவங்கதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏ.ஆர்.ரஹ்மான், அவரது மனைவி சாய்ரா பானு கடந்தாண்டு நவம்பர் 19ம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். 30 ஆண்டுகள் திருமண வாழ்க்கையை இருவரும் முறித்துக்கொண்டது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின்பு, இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் ஏதும் கருத்து கூறவில்லை. இந்த சூழலில், தனது முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானுவிற்கு கதீஜா ரஹ்மான், ரஹீமா ரஹ்மான் என்ற இரு மகள்களும், ஏ.ஆர்.அமீன் என்ற மகனும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





















