மேலும் அறிய

AR Rahman concert: ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சியில் குளறுபடி - ஏ.சி.டி.சி. நிறுவனத்தின் 3 பேர் மீது வழக்குப்பதிவு

மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சிக்கு 20,000 பேருக்கு அனுமதி பெற்று விட்டு 45 ஆயிரம் பேருக்கு டிக்கெட் விற்பனை செய்ததால் சம்பவ இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

AR Rahman concert: ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியை நடத்திய ஏசிடிசி நிறுவனம் தாங்கள் சொன்னதை விட அதிகமாக 45,000 டிக்கெட்டுகளை விற்றதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறி  இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மறக்குமா நெஞ்சம்:

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசை வாழ்க்கையை சிறப்பிக்கும் விதமாக மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 10ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நேரில் பார்க்க ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர். ஆனால், அவர்களை சரியாக கையாள நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் தவறிவிட்டனர். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பெரும்பலான ரசிகர்கள் குவிந்ததால் குளறுபடி ஏற்பட்டது. சில்வர், கோல்டு, பிளாட்டினம் என டிக்கெட்டுகள் முன்பதிவு செய்தவர்கள் நுழைவு வாயிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். 

இதனால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது. இசை நிகழ்ச்சியை பார்க்க முயன்றவர்களில் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் நடந்த அசம்பாவிதங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவியதுடன் சிலர் ஏ.ஆர். ரஹ்மானை விமர்சித்தனர். நிகழ்ச்சியை சரியாக நடத்த ஏற்பாடு செய்யவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. 

3 பேர் மீது வழக்குப்பதிவு:

இதற்கிடையே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடன் போலீசார் விசாரணை திரும்பியது. இதற்கிடையே நடந்த சம்பவத்துக்கு தானே பலியாவதாக கூறிய ஏர்.ஆர். ரஹ்மான் முன்பதிவு செய்துவிட்டு நிகழ்ச்சியை காண முடியாதவர்களுக்கு பணம் திருப்பி தரப்படும் என அறிவித்தார். அதன்படி ஒவ்வொருவரின் வங்கி கணக்கிற்கு அவர்கள் முன்பதிவு செய்த பணம் திருப்பி அனுப்பப்பட்டது. 

இந்த நிலையில் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்தின் ஹேமந்த் ராஜா மற்றும் மேலும் இருவர் மீது 188 மற்றும் 406 என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக  கூறப்பட்டுள்ளது. மேலும், 20,000 பேருக்கு அனுமதி பெற்று விட்டு 45000 பேருக்கு டிக்கெட் விற்பனை செய்ததால் சம்பவ இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும், அவர்கள் கணக்கு காட்டியவர்களின் தேவைக்கு ஏற்ப போலீசார் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை.. தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை ஏற்கப்படுமா?
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை!
Coimbatore: இந்துக்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்! இதுதான்டா தமிழ்நாடு! கோவையில் நெகிழ்ச்சி
Coimbatore: இந்துக்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்! இதுதான்டா தமிழ்நாடு! கோவையில் நெகிழ்ச்சி
Trump Vs Hamas: பிணைக் கைதிகள உடனே விடலைன்னா நீ செத்த.. ட்ரம்ப்பின் எச்சரிக்கைக்கு ஹமாஸின் பதில் என்ன.?
பிணைக் கைதிகள உடனே விடலைன்னா நீ செத்த.. ட்ரம்ப்பின் எச்சரிக்கைக்கு ஹமாஸின் பதில் என்ன.?
விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. அசத்த வரும் பதஞ்சலி தொழிற்சாலை!
விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. அசத்த வரும் பதஞ்சலி தொழிற்சாலை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Muthukumaran Vs Soundariya: Trump Praises Pakistan: பாகிஸ்தானுக்கு திடீர் பாராட்டு! இந்தியாவுக்கு செக்! ட்விஸ்ட் வைத்த ட்ரம்ப்Chandrababu Naidu vs MK Stalin : ’’இந்தி அவசியம்!’’சந்திரபாபு நாயுடு vs ஸ்டாலின் மும்மொழிக்கொள்கைStudents with PMK Flag : ஆண்டு விழாவா?கட்சிக்கூட்டமா?பாமக துண்டுடன் மாணவர்கள் சாதி பாடலுக்கு நடனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை.. தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை ஏற்கப்படுமா?
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை!
Coimbatore: இந்துக்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்! இதுதான்டா தமிழ்நாடு! கோவையில் நெகிழ்ச்சி
Coimbatore: இந்துக்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்! இதுதான்டா தமிழ்நாடு! கோவையில் நெகிழ்ச்சி
Trump Vs Hamas: பிணைக் கைதிகள உடனே விடலைன்னா நீ செத்த.. ட்ரம்ப்பின் எச்சரிக்கைக்கு ஹமாஸின் பதில் என்ன.?
பிணைக் கைதிகள உடனே விடலைன்னா நீ செத்த.. ட்ரம்ப்பின் எச்சரிக்கைக்கு ஹமாஸின் பதில் என்ன.?
விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. அசத்த வரும் பதஞ்சலி தொழிற்சாலை!
விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. அசத்த வரும் பதஞ்சலி தொழிற்சாலை!
இந்தி பெல்ட் மாநிலங்களில் ஒற்றை மொழி மட்டுமே பேசும் 90% மக்கள்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
இந்தி பெல்ட் மாநிலங்களில் ஒற்றை மொழி மட்டுமே பேசும் 90% மக்கள்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
EAM Jaishankar: ”திருடப்பட்ட காஷ்மீர், இந்தியா மீதான ட்ரம்பின் வரி திட்டம்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
EAM Jaishankar: ”திருடப்பட்ட காஷ்மீர், இந்தியா மீதான ட்ரம்பின் வரி திட்டம்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
Tamilisai Soundararajan : ”முன்னாள் ஆளுநருக்கே இந்த நிலையா?” போலீசாரிடம் எகிறிய தமிழிசை..!
Tamilisai Soundararajan : ”முன்னாள் ஆளுநருக்கே இந்த நிலையா?” போலீசாரிடம் எகிறிய தமிழிசை..!
Tamil 3rd Language: ”தமிழ்” மொழிக்கு சிறப்பு அந்தஸ்து..! நாடு முழுவதும் பறந்த கடிதம், மூன்றாவது பொதுமொழியாகும் செம்மொழி?
Tamil 3rd Language: ”தமிழ்” மொழிக்கு சிறப்பு அந்தஸ்து..! நாடு முழுவதும் பறந்த கடிதம், மூன்றாவது பொதுமொழியாகும் செம்மொழி?
Embed widget