Watch Video: தெலுங்கில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட அந்நியன்.. கொண்டாட்டம் என்ற பெயரில் ரசிகர் செய்த வேலையை பாருங்க!
Watch Video : ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'அபரிசித்துடு' திரைப்படம் 19 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது. அப்போது ரசிகர் ஒருவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் 2005ம் ஆண்டு வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் 'அந்நியன்'. ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து இருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்ததுடன் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டது. அம்பி, ரெமோ, அந்நியன் என மூன்று கெட்டப்புகளில் கலக்கிய விக்ரம் நடிப்பு பாராட்டுகளை குவித்தது.
தற்போதைய காலகட்டத்தில் ரீ ரிலீஸ் படங்கள் ட்ரெண்டிங்காகி வரும் நிலையில் 19 ஆண்டுகளை கடந்த 'அபரிசித்துடு' (அந்நியன்) திரைப்படம் மே 17ம் தேதியான நேற்று தெலுங்கில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ரசிகர்கள் படத்தை ஆரவாரத்துடன் கொண்டாடி தீர்த்தனர்.
அந்த வகையில் திரையரங்கில் 'அபரிசித்துடு' படம் திரையிடப்பட்டதும் அதன் கிளைமாக்ஸ் காட்சியில் மக்கள் முன்னிலையில் அந்நியன் தோன்றி பேசுவதுபோல காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.
அந்த காட்சியின் போது மொத்த ரசிகர் கூட்டமும் கூச்சலிட்டு விசில் அடித்து கொண்டாடி வந்த நிலையில் ஒரு ரசிகர் மட்டும் அந்நியன் போலவே வேடமிட்டு மேடையில் ஏறி அந்நியனை இமிடேட் செய்வது போல செய்தார்.
ரசிகரின் தீவிரத்தை இது வெளிப்படுத்தினாலும் ஒரு சிலர் படத்தை பார்த்து என்ஜாய் செய்யவிடாமல் அந்த அனுபவத்தை கெடுத்ததாக விமர்சனம் செய்தனர்.
OMG !!! 🤯🔥 @chiyaan#Aparichitudu #ChiyaanVikram pic.twitter.com/hNHkxpr1MK
— chiyaan Suresh 🥰 (@sureshkrishan8) May 17, 2024
'அபரிசித்துடு' அந்நியன் படத்தின் தெலுங்கு டப்பிங் என்றாலும் நாடு முழுவதிலும் உள்ள தெலுங்கு பேசும் ரசிகர்களின் இதயங்களை வென்றது.
ஊழல், அநீதி நிறைந்த சமூகத்தில் போராடும் ஒரு சாமானியன் திடீரென ஒரு சக்தி பெற்று முகமூடி அணிந்து ஊழலற்ற ஒரு சமுதாயத்திற்காக போராடி விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிப்பதாக அமைக்கப்பட்ட இந்த கதைக்களம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழில் மாபெரும் வெற்றி படமாக அமைந்த அந்நியன் திரைப்படம் எதிர்பாராத விதமாக தெலுங்கிலும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது 'அபரிசித்துடு' திரைப்படம். இப்படத்தில் படத்தில் சீயான் விக்ரம் , சதா, பிரகாஷ் ராஜ், விவேக், நெடுமுடி வேணு மற்றும் பலர் நடித்திருந்தனர். விரைவில் இப்படம் தமிழிலும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதற்காக தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

